

மாதவன், சித்தார்த்,நயன்தாரா, மீரஜாஸ்மின், காளி வெங்கட் நடிப்பில் நெட்பிளிக்ஸ் இல் வெளிவந்திருக்கும் படம்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர மாய் திகழும் அர்ஜுன் ( சித்தார்த்) இரண்டு சீசன்களாக பெரும் வெற்றியை எட்டாததால் , கமிட்டி அவரை நிராகரிக்கிறது… voluntary ரிட்டையர் மெண்டில், வெளியில் செல்ல, அர்ஜுனை நிர்பந்திக்கிறது.. இந்நிலையில். வரவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் இறுதி டெஸ்ட் போட்டியின் கலந்து, வெற்றி பெற துடிக்கும் அவரை நிர்வாகம் ஒரு பக்கம் புறக்கணிக்க, மறுபக்கம். அவரது பள்ளித் தோழியும் ஆசிரியையுமான குமுதா (நயன்தாரா), குழந்தை யின்மையால் மனம் உடைந்து, தன் கணவன் சரவணனோடு (மாதவன்) செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கணவன் மாதவன் மனைவியிடம் கேன்டீன் நடத்துவதாகப் பொய் சொல்லி, தனது புதிய கண்டுபிடிப்பு கனவுக்காக காளி வெங்கட் டோடு கூட்டு சேர்ந்து பெரும் தொகையைக் கடனாக சேட் டிடம் வாங்கி உள்ளனர்..கடனை கட்ட சொல்லி சேட் அவரை வற்புறுத்த விஞ்ஞானி யான சரவணன் அந்தக் கடன் பிரச்னை யை , எப்படி சமாளிக்கிறார் ? மேலும் அர்ஜுன் மறுநாள் நடக்கும் டெஸ்ட் மேட்ச் இல் கலந்தரா? நயன்தாராவின் குழந்தை கணவு என்று மூன்று சூழலையும் இணைத்து, டெஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர் சஷிகாந்த்.
உச்சத்திலிருக்கும் ஒரு கிரிக்கெட் நட்சத்திரத்தின்,மிடுக்கு தோல்வியை ஒப்புக்கொள்ளாத திமிர், தந்தையின் பாசம், கிரிக்கெட் டே தன் வுயிர் என வெவ்வேறு கட்சிகளுக்கு ஏற்ப, சிறப்பாக நடித்திருக்கிறார் சித்தார்த்.
தாயாக விரும்பும் கதாபாத்திரத்தில் நயன்தாரா. இருந்தும், தன் பள்ளி தோழன் மகன் கட்டுப்பட்டு கிடந்தும்..கணவனுக்கு ஒத்துழைக்கிறார்.
மாதவன், தன் கனவுகளுக்கு அங்கீகாரம் கிடைக்காத விரக்தியில் செய்வதறியாது, செய்யும் தீமை, வில்லனாக..
சக்தி ஸ்ரீ கோபாலன், இசை கதைக்கு பலம்…