சிபி சத்யராஜ், கஜ ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 10 hours..
இயக்கம் – இளையராஜா கலிய பெருமாள்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சிபிராஜிடம், தனது பெண்ணை காணவில்லை என்று தம்பதியர்கள் புகார் தர, அங்கிருந்து தொடங்குகிறது கதை….

காணாமல் போன பெண்ணை கண்டு பிடிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபிராஜ் விசாரணையை தொடங்குகிறார்…அதே சமயம்
பேருந்து ஒன்றில் ஒரு பெண்ணை கொடுமை செய்வதாக புகார் வர, அதனையும் சேர்த்து விசாரணை தொடங்குகிறது..

பேருந்தை கண்டுபிடித்து, அது தொலைந்து போன பெண்ணாக இருக்குமோ என்று, தேட அங்கே ஒரு ஆணின் சடலம் கிடைக்க
கொலையுண்டவன் யார் ??
கொலைக்கான காரணம் என்ன என்பதை சிபிராஜ் கண்டுபிடித்தாரா? என்பதே கதை…

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக வந்திருக்கு டென் ஹவர்ஸ்…ஐயப்பன் மலைக்கு செல்ல மாலை போட்டு, கிளம்ப இருக்கும் சிபி சத்யராஜிற்கு, ஒரு கொலை நிகழ்வை 10 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டிய, ஒரு சவாலான கதா பாத்திரம்….சிறப்பாக செய்திருக்கிறார்..ஒரே இரவில் நடக்கும் கொலைகளை, அதற்கான காரணங்களை பர பரப்பாக தந்திருக்கிறார் இயக்குனர்..