கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடித்துள்ள படம் வல்லமை.

இவருக்கு மகளாக, திவ்யதர்ஷினி , தீபா சங்கர் , சி.ஆர் ரஞ்சித் , சுப்ரமணியன் மாதவன் , திலீபன் , சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

பேட்லர்ஸ் சினிமா இப்படத்தை தயாரித்துள்ளது. ஜிகேவி இசையமைத்துள்ளார். .

மனைவியை இழந்த பிரேம்ஜி தனது மகளுடன் சென்னைக்கு வேலை தேடி வருகிறார், அவர் தன் மகளை அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு, விடியர் வேளையில் போஸ்டர் ஒட்டும் வேலை அவருக்கு கிடைக்க, எளிய வாழ்கையை தன் மகளுடன் வாழ்கிறார்… பள்ளியில் பிரேம்ஜியின் மகள், சுய நினைவு இழக்கப் பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்.., இதை செய்தது யார். அவரை கண்டுபிடித்து ஒரு தந்தையாக பிரேம்ஜி எடுக்கும் முடிவு என்ன? என்பது தான் வல்லமை படத்தின் கதை…

நகைச்சுவை கதாபாத்திரங்களில் பார்த்து பழகிய பிரேம்ஜி யை, சீரியஸான கதையில் பார்ப்பது என்பது கொஞ்சம் கடினமாக இருப்பினும் தன்னால் முடிந்த அளவு கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் பிரேம்ஜி. மகளாக நடித்துள்ள திவ்யதர்ஷினியும் நம்மை கவர்கிறார்.

பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையமாக வைத்து, சமீபத்திய ஆண்டுகளில் சில படங்கள் வந்த போதும், அந்த கயவர்களை கண்டு பிடிப்பதை சவாலான கதை களத்துடன் கொண்டு சென்ற சில இயக்குனர்கள் நடுவில், ஒரு சாமானியன் தன் மகளுக்கு நேர்ந்த கொடுமையை, யதார்த்த மாக எவ்வாறு எதிர்கொள்கிறார் என்று காட்டுகிறார் இயக்குனர்..

அதை சாத்தியப்படுத்து வதில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருந்தால், வல்லமை வலுவான படமாக இருந்திருக்கும்…