
டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் நடைபெற்ற வெளியீட்டிற்கு முன் நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விரும்புகிறேன். இன்றைய சினிமாவில் காமெடி குறைந்து விட்டது. சீரியஸான திரைப்படங்கள் நிறைய வருகிறது. பெரிய நட்சத்திரங்கள் ஆக்ஷன் படங்களில் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஜாலியான, காமெடியான, ஃபீல் குட் திரைப்படங்களும் வரவேண்டும். அண்மையில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை பார்த்தேன், நன்றாக இருந்தது. அந்தக் குழுவிற்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சியான திரைப்படங்களும் வரவேண்டும். அந்த விஷயத்தில் நாம் அனைவரும் சந்தானத்தை தவற விடுகிறோம். அவர் ஹீரோவாக நடிப்பதுடன் நான் அல்லது ஆர்யா போன்ற நட்சத்திரங்களுடன் இணைந்தும் நடிக்க வேண்டும். தமிழ் ரசிகர்களுக்காக அவர் இப்படி நடிக்க வேண்டும் என இந்த மேடையில் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு ஆரம்பமாக ‘எஸ் டி ஆர் 49’ இருக்கும். அந்த வகையில் இனிமேல் சந்தானத்தை அதிக படங்களில் பார்க்கலாம்.
மே 16ம் தேதி அன்று அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று இந்த திரைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.