
சிவ சண்முகா வின் இயக்கத்தில், தேவயானி முதன்மை கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக விஜித் மற்றும் கதாநாயகி யாக கண்மனி நடித்து வெளி வந்திருக்கும் படம் ” “நிழற்குடை.”
நிரஞ்சனும் லான்சியும் காதலித்துக் கல்யாணம் செய்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால் தன்னந்தனியாக ஒரு அபார்ட்மெண்டில் குடியிருக்க, இருவருமே வேலைக்கு செல்வதால் தன் குழந்தை நிலா வை பார்த்துக்கொள்ள, ஒரு கேர் டேக்கர் ஐ வைக்கின்றனர். ஆனால் கேர்-டேக்கர் அவர்கள் இருவரும் இல்லாததால், தன் இஷ்டத்திற்கு வாழ்கிறார் அவர்கள் வேலையில் இருந்து திரும்பி வரும் வரை..அது ஒத்து வராததால், ஆசிரமத்தில் இருந்து ஜோதிம்மாவை (தேவயானி)அழைத்து வருகின்றனர். அவரும் தன் குழந்தை போல் நன்றாக பார்த்து கொள்கிறார்…இதற்கிடையில், அமெரிக்கா செல்வதையே இலட்சியமாக கொண்ட இருவரும், அது நிறைவேற போகின்ற சந்தோஷத்தில், நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க, திடீரென நிலா காணாமல் போகிறாள்…. குழந்தை நிலாவை தேடும் தம்பதியருக்கு நிலா கிடைத்தாளா? என்பதே மீதிக் கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகியாக நடித்திருக்கும் தேவயானி, எல்லளவிலும் குறையாத சிறப்பான நடிப்பிணை தந்திருக்கிறார்….பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை, அண்பு, பாசம் மற்றும் கூட்டு குடும்பத்தின் அத்தியாவசியம் போன்ற அனைத்து நல் விஷயங்களையும் எடுத்துரைக்கும் இடத்தில் மேலோங்கி நிற்கிறார்..
விஜித்,அதிக படங்களில் பர்த்திருபினும் இதில் முத்தாய்ப்பாக தெரியும்படி சிறப்பாக தன் நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்..
கண்மனி மற்றும்
குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி ஜி.வி.அஹானா அஸ்னி மற்றும் நிஹாரிகா ஆகிய இருவரது நடிப்பும் சிறப்பு.
ஹிமேஷ் பாலாவின் வசனங்கள் சில இடங்களில் கசப்பாகிபோன உண்மை…
ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு,நரேன் பாலகுமாரின் இசை இரண்டும் படத்திற்கு பக்க பலம்..
குழந்தை வளர்ப்பை மையமாக வைத்து, அதே சமயம் கோடு மாறாமல் சொல்ல வந்த விஷயத்தை, அதன் மகத்துவத்தை சொல்லியிருப்பதால் அவரை பாராட்டி, இந்த “நிழற்குடை”பல பேர் பார்த்து, இளைப்பாறி போக வேண்டிய இடம்…
.