
அறிமுக இயக்குனர் தர்மா புது முகங்களுடன் களம் இறங்கி அதகள ஆட்டம் ஆடி இருக்கும் படம் ஆகக்கடவன.
பிரபஞ்ச விதி யை பற்றி பேசி இருக்கிறது படம்
மூன்று நண்பர்கள் ஒன்றாக மெடிக்கல் கடையில் வேலை செய்ய, அந்த மெடிக்கல் கடையின் உரிமையாளர் தன் மகளுக்கு திருமணம் முடிக்க அதிக பணத்தேவை இருப்பதால் இந்த மூன்று நண்பர்களிடம் மெடிக்கல் கடையை வாங்குமாறு சொல்கிறார்… அவர்களும் தங்கள் மூவருக்கும் சொந்தமாக ஒரு கடை இருக்க வேண்டும் என்ற ஆ சையுடன் மெடிக்கல் கடையை வாங்க பணத்தை ஏற்பாடு செய்கின்றனர். அவர்கள் ஏற்பாடு செய்தும் சேமித்து வைத்து இருந்த பணமும் திருடு போகவே மூவரும் இணைந்து தங்களது பெற்றோர்களிடம் பணம் வாங்க ஊருக்கு செல்கின்றனர்… நண்பர்களான ஆதித்யா ( ஆதிரன் சுரேஷ் )வும் விக்கி ( சி ஆர் ராகுல் )ம் ஒரே பைக்கில் செல்ல, நடுவில் வண்டி பஞ்சர் ஆகிறது பஞ்சர் கடையை தேடி இவர்கள் இருவரும் காட்டுக்குள் செல்கின்றனர்.. அங்கே இருக்கும் முகம் தெரியாத நபர்களுடன் இவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த மோதலில் இவர்களுக்கு ஏற்படும் ஆபத்தே மீதி கதை.
ஆரம்பித்தில் ஆசால்ட்டாக ஆரம்பித்த கதை, அடுத்த கட்டத்திற்குள் நுழைய, நாமும் சீட்டின் நுனி க்கு இயல்பாக வந்து விடுகிறோம்…
காதல் கத்தரிக்காய், பாடல் என்றோ, எதுவும் இல்லாமல், அதே சமயத்தில் கதையை விட்டு விலகாமல் திரைக்கதையை நேர்த்தியாக நகர்த்தியிருக்கிறார்.. இயக்குனர் தர்மா..
நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்திருக்கும் வின்சென்ட், சதிஷ்ராமதாஸ், மைக்கேல், பஞ்சர் கடை சிறுவன் என அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
லியோ வி ராஜாவின் அழகான ஒளிப்பதிவு..சாந்தன் அன்பழகனின் பதற்றமான பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்…
ஆகக்கடவன என்பதின் அர்த்தம் அப்படியே ஆகட்டும்..அதுபோல் இப்படமும் வெற்றி பெற ஆகக்கடவன..