
இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கி z5 ஓடீடி பிளாட்பார்மில் வெளிவந்திருக்கும் சீரிஸ் சட்டமும் நீதியும்…. சாதாரண நோட்டரியாக நீதிமன்றத்துக்குள் வெளியே அமர்ந்து, கோர்ட்டுக்கு வரும் புகார்களை டைப் அடித்துக் கொண்டிருக்கும் சாதாரண வக்கீலான சுந்தரமூர்த்தி (சரவணன்) யிடம் அசிஸ்டன்ட்டாக அருணா (நம்ரிதா) வேலைக்குச் சேர முயல்கிறார். நானே கேஸ் இல்லாமல், வெளியே இருக்கிறேன். நீயேம்மா என்னிடம் சேரத் துடிக்கிற, போய் ஒரு நல்ல வழக்கறிஞரிடம் அசிஸ்டன்ட்டாக சேர் என துரத்துகிறார்…. ஆனால், யாருமே அருணாவுக்கு வேலை கொடுக்கவில்லை.
நீதிமன்ற வளாகத்தில் குப்புசாமி என்பவர் தீக்குளித்து இறக்க, அவருக்கு நீதியை தேடித் தரவேண்டும் என முடிவு செய்யும் சுந்தரமூர்த்தி பொதுநல வழக்கு போடுகிறார். தனது மகளை காணவில்லை என குப்புசாமி போலீஸாரிடம் முறையிட அவர்கள் வழக்குப் பதிவு செய்யாமல், அவரை விரட்டி அடிக்கின்றனர். அதன் காரணமாகவே குப்புசாமி தீக்குளிக்கிறார்.. இந்த வழக்கை சுந்தரமூர்த்தி கண்டுபிடிக்க ஆரம்பிக்க, இறந்து போன குப்புசாமி 20 ஆண்டுகளாக மன வளர்ச்சி காப்பகத்தில் இருந்தார் என்றும் அவரது மகள் 20 ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போனதாக வும் பல திருப்பங்களுடன் மாறுகிறது… சுந்தரமூர்த்தி பல வருடங்களுக்குப் பிறகு எடுத்த கேஸில் ஜெயித்தாரா? இல்லையா? குப்புசாமியின் மகள் வெண்ணிலாவுக்கு என்ன நடந்தது என்பது தான் இந்த ‘சட்டமும் நீதியும்’ வெப்சீரிஸின் கதை.
தனது எதார்த்தமான நடிப்பால் சுந்தரமூர்த்தி என்ற வழக்கறிஞர் வேடத்தை ஏற்று இயல்பாக நடித்து வெற்றியும் பெற்று இருக்கிறார் சரவணன்…
சரவணனின் உதவியாளராக நடித்திருக்கும் அம்ரித்தா கதைக்கு ஏற்றார் போல்
சாதிக்கத் துணியும் இளம் வக்கீலாக நடித்திருக்கிறார்..
இசையமைப்பாளர் விபின் பாஸ்கர், பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையும் அளவாக கையாள,
ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுல்கிருஷ்ணன் நீதிமன்ற வளாகத்தை பல கோணங்களில் காட்டி சிறப்பான ஒளிப்பதிவை மேற்கொண்டு இருக்கிறார்..
இயக்குனர் பாலாஜி செல்வராஜ் திரைக்கதையில் பல திருப்பங்களை வைத்து சுவாரசியமாக ரசிக்கும்படி வடிவமைத்திருக்கிறார்… மொத்தத்தில் சட்டமும் நீதியும் இக்காலத்திற்கு தேவையான ஒன்று என்பதை ரசுக்கும் படியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்…