ஜோவிகா விஜயகுமார் தயாரித்து வனிதா விஜயகுமார் இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் படம் Mrs & Mr..

காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பேங்காக்கில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர் வனிதா மற்றும் அவருடைய மிஸ்டர் ஆகிய ராபர்ட் மாஸ்டர்.. திருமணம் ஆன புதிதில் வனிதா தன்னுடைய அழகு போய்விடும் என்பதற்காக குழந்தை இப்பொழுது பெற்றுக்கொள்ள வேண்டாம் என கண்டிஷன் போடுகிறார். இப்படியே 10 வருடங்கள் சென்றுவிட, குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வருகிறது வனிதாவிற்கு

இப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டால் இனி முடியவே முடியாது என்ற நிலைமைக்கு போய்விடாமல் இருக்க உடனடியாக தாயாக வேண்டும் என்ற எண்ணத்தில் பலவிதமான முயற்சிகளை செய்கிறார். அதற்கு மாறாக குழந்தையே வேண்டாம் என்று மறுக்கிறார் ராபர்ட்… அதற்கு என்ன காரணம் வனிதா விரும்பியபடி குழந்தையை பெற்றுக் கொண்டாரா இல்லையா??என்பதே மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ்..

எப்படியும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசையோடும் ஏக்கத்தோடும் நடித்திருக்கும் வனிதா முடிந்த அளவுக்கு தன்னாலான நடிப்பை கொடுத்திருக்கிறார்..
தனது எக்ஸ் பாய் பிரண்டான ராபர்ட் மாஸ்டருடன் சேர்ந்து நடித்ததால் கெமிஸ்ட்ரி ரொம்பவே வொர்க் அவுட் ஆகி இருக்கிறது

40 வயது பெண்ணின் குழந்தை கனவினை ஏக்கத்தோடு அவர் படும் இன்னல்களை யும் சேர்த்து கதையாக சொல்லி இருக்கிறார் வனிதா…

ஸ்ரீகாந்த் தேவா இசை கேட்கும் ரகம். சிவராத்திரி பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன் சிறப்பாக அமைந்துள்ளது.