
அனீஷ் இயக்கி காதநாயகன் வெற்றி மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடித்து வெளிவந்திருக்கும் படம்.சென்னை பைல்ஸ் முதல் பக்கம்
கிரைம் தொடர் எழுத்தாளரின் மகனான வெற்றி, பத்திரிகை ஒன்றில் தன் தந்தையின் வாழ்க்கையை தொடராக எழுத சென்னை வருகிறார். சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டரான தம்பி ராமையாவுடன் நட்பு ஏற்பட, வெற்றியின் துப்பறியும் திறனால் ஈர்க்கப்படும் தம்பி ராமையா, தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு சில கேஸ்களை அவருடைய ஐடியா மூலம் தீர்க்கிறார்… அப்போது, பெண் நிருபர் ஒருவரும், சில பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியாக கொடூரமாக கொலை செய்யப்பட. இந்த தொடர் கொலைகளின் பின்னணியை கண்டுபிடிக்க தம்பி ராமையா வெற்றியின் உதவியுடன் களத்தில் இறங்குகிறார்.. கொலைகளுக்கான காரணம் என்ன அதனை செய்தது யார்? என்பதே ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’.
திரில்லர் ஜானர் படங்களுக்கு என்று நேர்ந்துவிட்டார் போல் வெற்றி இப்படத்திலும் அலசி ஆராய்ந்து,, தன் நடிப்பை வழங்கியுள்ளார்…. வழக்கமாக ஒரே சாயலில் நடித்து வருகிறார் என்ற போக்கினை முற்றிலுமாக மாற்றி நடித்து இருக்கிறார் வெற்றி..
நாயகியாக நிருபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சில்பா மஞ்சுநாத்துக்கு, காட்சிகள் குறைவு. நிருபருக்கானா வேலை யும் குறைவு…
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தம்பி ராமையா, தனது வழக்கமான உடல்மொழியோடு காமெடி யாகவும், சில நேரத்தில்பொறுப்பான அப்பா வாகவும் நடித்துள்ளார்…
ஏ.ஜே.ஆர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
அரவிந்தின் ஒளிப்பதிவும், விஷாலின் படத்தொகுப்பும் படத்தை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் கொண்டு சென்றிருக்கு…
சமூக பிரச்சனை பற்றி
எழுதி இயக்கியிருக்கும் அனிஷ் அஷ்ரப் கு பராட்டுகள்…