அணில் v நாகேந்திரன் இயக்கி சமுத்திரக்கனி சித்திக், பரத் சுரபி லட்சுமி ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் வீரவணக்கம்

இன்றளவும் கம்யூனிச கொள்கையை தழைக்கச் செய்தவர் பி.கிருஷ்ணப் பிள்ளை… ஒடுக்கப்பட்ட தொழிலாளிகளின் விடுதலைக்காக போராடிய அவரது வாழ்க்கை யை படமாக அதாவது பாடமாக தந்திருக்கிறார்கள்…

இன்றைய காலகட்டத்தில் தொடங்கும் கதையில் நடிகர் பரத் கம்யூனிஸயவாதியாக வருகிறார்.. சாதி பாகுபாடால் பக்கத்து ஊரில் நடந்த சண்டைகளால் பாதித்தவர்களை அழைத்துக் கொண்டு, சாதி வித்தியாச பாகுபாடு எதுவும் பாராத பரத்… கேரளா நாட்டிற்கு செல்கிறார்.., அங்கே சுதந்திரத்திற்கு முன் பி கிருஷ்ணன் பிள்ளையுடன் பழகிய, ஜமீந்தார்களால் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட முதிர்ந்த பெண்மணி பி. கே. மேதினி இருக்க,, வயது 96, அவர் பி. கிருஷ்ண பிள்ளையின் கதையினை சொல்ல ஆரம்பிக்கிறார்..

பி. கிருஷ்ணன் பிள்ளையாக சமுத்திரக்கனி மிடுக்கான தோற்றத்துடன்…கதைக்கேற்ப புரட்சியாளராகவே வாழ்ந்திருக்கிறார்…

ஜமீனின் ஊரில் எத்தனை கல்யாணம் நடந்தாலும், முதல் இரவு மட்டும் இவருடன் தான் என்று அதிகார வர்கத்தின் ஆணவத்தை முகத்தில் கொண்டு ஓட்டு மொத்த குத்தகை காரராய் நடிகர் சித்திக்…

சுரபி லக்ஷ்மி.. பி கிருஷ்ண பிள்ளையிடம் மனதை பறிகொடுக்கும் காதலியாக…

இவர்களுடன் மற்ற வேடங்களில் நடித்திருக்கும் ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷரோடி, அதர்ஷ், ஆய்ஷ்விகா உள்ளிட்டோர் பாத்திரங்களுக்குப் பொருத்தமாக நடிந்துள்ளனர்

கடந்த கால அரசியலால், மக்கள் படும் அவதிகளும், ஜமீனின் அடிமை தனத்தினால் அவர்கள் படும் இன்னல்களை யும் இக்காலத்திற்கு வரலாறாக தெரிய படுத்தியதற்காக இயக்குனரை பாராட்டலாம்.