
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ருக்மணி வசந்த் விஜி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மதராஸி..
இசை அனிருத்
தமிழ்நாடு முழுவதும் கள்ள துப்பாக்கியை இலவசம் என்ற பார்வையில் விநியோகம் செய்ய ஆறு கண்டெய்னர்களில் சென்னைக்கு வருகிறது…. வைக்கப்படுகின்றன. அதை அறியும் தேசிய புலனாய்வு மதுறை (என்.ஐ.ஏ) அதிகாரி பிஜு மேனன் தலைமையிலான குழு, ஒன்று படத்தின் தொடக்கத்திலேயே அதனை முறியடிக்க முயலுகிறது..
அதோடடு நில்லாமல் துப்பாக்கிகளை அவர்கள் பதுக்கி வைத்திருக்கும் தொழிற்சாலைக்கு உள்ளே சென்று அவற்றை அழிக்க முடிவெடுத்து, ஆலை குள் சென்று, அவற்றை வெடிக்க ‘சூசைட் ஆபரேஷனுக்கு’ ஏற்ற ஆளைத் தேடுகிறார் பிஜு மேனன்… இந்நிலையில் தன் காதலி மாலதி ( ருக்மணி வசந்த்) யி ன் பிரிவால் தற்கொலைக்கு முயற்சிக்கும் ரகு (சிவகார்த்திகேயன்) பிஜூ மேனன் கண்ணில் பட, தன் திட்டத்திற்கு ரகுவை பயன்படுத்த முடி வெடிக்கும் நிலையில் இவர்களின் தொடர் சம்பவமே மதராசி திரைப்படத்தின் கதை ……
படத்தின் ஆரம்பத்தில் 20 நிமிட சண்டை காட்சியில்… அதகளப்படுத்திய ஆக்சன் வில்லனான (வித்யூத் ஜாம்வல்) ஐ அறிமுகபடுத்தி அவரை முதன்மைப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்..
கதையின் மையப் பகுதியை கையில் கொண்டு தன் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார் பிஜுமேனன்.
வழக்கமான துள்ளல் நக்கல் நையாண்டி என எந்த காட்சிகளும் இல்லாமல், இயக்குனர் சொல்லியவாறு மீட்டருக்குள் அளவாக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்..
காதலியாக வரும் ருக்மணி வசனம் ஏற்கனவே ஏஸ் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இப்படத்தில் தன் திறமையான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்..
படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். மற்றும் அனிருத் இசையில், ‘சலம்பல’, ‘தங்கப்பூவே’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன..
லாஜிக் பார்க்காமல் ரசிக்கலாம்…