நடிகரும் இயக்குனருமான பாலாஜி வேணுகோபால் எழுத்து மற்றும் இயக்கத்தில் பாண்டியன் ஸ்டோர் குமரன் நடித்த வெளிவந்திருக்கும் படம் குமார சம்பவம்.. இவருடன் பாயல், ஜி எம் குமார், குமரவேல், வினோத் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்….

குமரன் வீட்டு மாடியில் தங்கி இருக்கும் சமூக போராளியான குமரவேல் இறந்து கிடப்பதில் இருந்து கதை ஆரம்பமாகிறது.. அவரைக் கொன்றது யார் என்று கோணத்தில் வீட்டு உரிமையாளரின் மகன் குமரன் தங்கராஜன் இடம் விசாரணை தொடங்குகிறது.
கதைக்கு இடையே சினிமாவில் இயக்குனராக ஆக முயற்சிக்கும் குமரனின் கனவோடு காதல் கதையும் சேர்ந்து தொடங்குகிறது.. இதில் குமரன் கதை சொல்ல, ஓவ்வொரு முறையும் கதையைக் கேட்டவர்கள் சம்பவமாக தொடங்குகிறார்கள்.. இப்படி ஒரு ஜாலியான கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்..

பாண்டியன் ஸ்டோர் தொடர் ரசிகர்களுக்கு நன்றாக அறிமுகமான குமரன் தங்கராஜன் நடிப்பைப் புதிதாக கற்க வேண்டியதில்லை. உடற்கட்டை பேணுவதைப் போலவே தனது தேறிய நடிப்பையும் படு கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
தன் தாத்தா ஜி.எம்.குமாரையே தயாரிப்பாளராக மாற்ற அவர் போடும் திட்டங்கள் எல்லாம் அமர்க்களம். 

மெத்தட் ஆக்டர் வினோத் ராஜ் ஒரு சிபிஐ அதிகாரியாக அவர் நிஜத்தில் நடிக்க வேண்டி வர அந்த காட்சிகள் எல்லாம் கலகலப்பின் உச்சம். 

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவும், அச்சு ராஜாமணியின் இசையும் படத்திற்கு பக்கபலம்..

சிறந்த நகைச்சுவைப் படமாக
கொடுத்திருக்கிறார் பாலாஜி வேணுகோபால்