ஸ்ரீ சூர்யா மூவிஸ் ஏ.எம் ரத்தினம் தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000-இல் வெளியாகிய குஷி திரைப்படம் அன்றைய காலத்தில் மாஸ் ஹிட் அடித்த படம்…. பாடல்கள் அத்தனையும் அருமை.. குறிப்பாக ” கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா” பாடல் ரசிகர்களின் மனதை கிரங்கடித்த பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது..

மீண்டும் இப்படத்தை  சக்தி ஃபிலிம் பேக்டரி  வெளியிட உள்ளது.. இதன் மறுவெளியீட்டு டிரைலரை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இயக்குனர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா“ வெளியிட்டார்…வரும் செப்டம்பர் 25, அதாவது  25  வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆக இருக்கு.. கில்லி சச்சின் கு பிறகு விஜயின் குஷி 2k கிட்ஸ் களுக்கு ஒரு விருந்து…