வி.கே.புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில்
வ.கௌதமன் நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் “படையாண்ட மாவீரா”.  காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருக்கு.மேலும் இவருடன்நாயகியாக பூஜிதா,
சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்…

அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் தகப்பன் ஒருவன் தான் மகளை மருமகன் அடித்து கொடுமை படுத்துகிறான் என்று கம்ப்ளைன்ட் கொடுக்க வந்த அந்த பெண்ணை காவல் அதிகா ரியே பாலியல் சீண்டல் செய்ய அந்த காவல் அதிகாரியையும், ஸ்டேஷன் ஐயும் பந்தாடி என்ட்ரி கொடுக்கிறார். படையாண்ட மாவீரனாக (காடு வெட்டி குரு)வ.கௌதமன்.. தன் இன மக்களை எப்படியாவது படிக்க வைத்து அதிகாரத்தில் உட்கார வைக்க வேண்டும் என்று பாடுபடுவதும் மண்வளங்களை கார்ப்பரேட் காரர்கள் தன் வசப்படுத்த முயல, அதனை போராடி மீட்டு மக்களுக்காக தன் பணி செய்து உயிரை விடுகிறார்….

காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் வ.கௌதமன், கம்பீரமான தோற்றத்துடன், நடை, உடை பாவனைகள் என அனைத்தும் நம்மிற்கு விஜயகாந்த் ஐ நினைவு படுத்துகிறது…. பூஜிதா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

காடுவெட்டி குருவின் இளம்பருவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் கெளதமனின் நடிப்பும், சிலம்பும் சுற்றும் லாவகமும் கவனிக்க வைக்கிறது

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு பலம்.

படையாண்ட மாவீரா தெற்கில் அதிகம் கல்லா கட்டும்.