கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்
புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாளை ஒட்டி, அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் அனந்தா…

இத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா, ராயப்பேட்டை, தி மியூசிக் அகாடமியில் நடந்தது.

இப்படத்தில், ஜெகபதி பாபு சுஹாசினி, ஒய்.ஜி.மகேந்திரன், தலை வாசல் விஜய், அபிராமி வெங்கடாச்சலம், சிவரஞ்சனி ஆகியோர் நடித்துள்ளனர்..

வசனம், பாடல்கள் பா.விஜய் எழுத தேன் இசை தென்றல் தேவா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்..

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசும் பொழுது,
இது ஒரு பக்தி படம் மட்டும் அல்ல, ஒவ்வொருவர் வாழ்க்கையில் நடக்கும் அற்புதம், அதிசயத்தையும் நிகழ்த்தும் படம் இது.. 5 மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் அதிசயத்தை தொகுத்து, இறுதியாக ஒன்று கோர்த்து படைத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.. உலகம் முழுவதும் வெளியிடும் வெளியீட்டு உரிமையை ஏபி இன்டர்நேஷனல் வாங்கி இருக்க வரும் 23ஆம் தேதி டிஜிட்டல் தளத்தில் வெளிவர இருக்கிறது…