
பிரபு சாலமன் இயக்கத்தில் அறிமுக நடிகர் மதி, மற்றும் நடிகை ஷ்ரிதா ராவ் நடித்து வெளிவந்திருக்கும் படம் கும்கி 2.
மலை கிராமத்தில் வாழும் சிறு பிள்ளை மதி பள்ளத்தில் சிக்கிய யானைக் குட்டியை காப்பாற்றுகிறார். அதன்பின் மதியை அந்த யானை குட்டி விடாமல் துரத்துகிறது. இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட இருவரும் இணைந்து மலை பகுதியில் சுற்றி வருகின்றனர்.. குட்டி யானை பெரிய யானையாக மாற நாயகனும் வளர்கிறார். சகோதரர்கள் போல் அவர்கள் இருவருக்குமான உறவு வலுவாக, பள்ளி படிப்பை முடித்துஅதனை தன் நண்பனிடம் சொல்ல வரும் நிலையில் நண்பனான நிலா என்கிற யானை திடீரென காணாமல் போகிறது. எங்கு தேடி அலைந்தும் யானை கிடைக்கவில்லை. தனது ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் நாயகன் வெளி ஊருக்கு படிக்கச் செல்கிறான். ஐந்து ஆண்டுகள் கழித்து அவன் திரும்பி வரும் போது அவனது யானையைப் பற்றிய தகவல் கிடைக்கவே மறுபடியும் அதை தேடி செல்கிறான். யானை காணாமல் போனதன் பின்னால் இருக்கும் காரணம் என்ன ? யானையை நாயகன் மதி கண்டுபிடித்தானா?என்பதே கும்கி 2 படத்தின் கதை
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் மதி பக்கத்து வீட்டு நாயகன் போல் இருந்தாலும், கமர்சியல் நடிகருக்கான பக்குவத்தை கொண்டு பல இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்… . நாயகியாக வரும் ஸ்ரிதா ராவ் சிறு பெண்ணாக தெரிந்தாலும், சிறப்பாக நடித்துள்ளார். அர்ஜூன் தாஸ் , ஹரிஷ் பேரடி போன்ற பிற நடிகர்கள் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்..
ஒளிப்பதிவாளர் சுகுமார் தனது கேமரா வழியாக, மலை ஆறு, பள்ளத்தாக்கு என சொக்க வைக்கும் இயற்கை அழகை படம் பிடித்து காட்டியுள்ளார்..
நிவாஸ். கே. பிரசன்னா தன் பங்குக்கு இப்படத்தை மெருகூட்டி இருக்கிறார்.. மற்றபடி கும்கி நம்மளை கவர்ந்தது போல் கும்கி 2 அதனை தவற விட்டு விட்டது…

