மகேந்திரநாத் கொண்டலா தயாரித்து
வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளி வந்திருக்கும் படம் “சபரி”….இதுஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக வந்திருக்கு…

இயக்கம் – அனில் காட்ஸ்

இப்படத்தில் வரலக்ஷ்மி யுடன் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் மதுநந்தன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சஞ்சனா ( வரலக்ஷ்மி சரத்குமார் ) ஒற்றை தாயான இவள் தனது ஐந்து வயது குழந்தை ரியா (குழந்தை கிருத்திகா) வுடன், தன் தோழியின் வீட்டிற்கு வருகிறாள்…அங்கு ஒரு வேலையும் வாங்கி கொண்டு தன் குழந்தையை வளர்க்க திட்டமிட, இடியாய் வருகிறார் மைம் கோபி.. மனநலக் காப்பகத்திலிருந்து தப்பித்து வந்த சூர்யா (மைம் கோபி) வரலக்ஷ்மி யிடம் இருக்கும் குழந்தையை அபகரிக்க முயல, அவரது முன்னாள் கணவர் கணேஷ் வெங்கட்ராமனும், குழந்தையை கேட்க, தப்பித்து ஓடும் வரலக்ஷ்மி,
குழந்தையை சொந்தம் கொண்டாடும் மைம் கோபி, அதே குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்பது ஏன்? அவரிடம் இருந்து குழந்தையை மீட் டாரா? என்பதே “சபரி”..

ஒற்றை தாய் ஆக வரும் வரலட்சுமி பெண்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் பாத்திரமாக நடிச்சிருக்காரு..

வரலட்சுமியின் கணவராக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமன், வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கும் ஷசாங் இருவரும் கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். 

ஒளிப்பதிவாளர்கள் ராகுல் ஸ்ரீவத்சவ் மற்றும் நானி சமிடிஷெட்டியின் கேமரா கதைக்கு ஏற்ப பயணித்திருக்க….

கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கேட்கும் ரகம்… சபரி – தன்னம்பிக்கை 3/5…