
காட்சிகள் பார்த்தேன், உதயாவின் திறமை பளிச்சிடுகிறது. பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இப்படம் உதயாவின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனையாக திகழும். படக்குழிவினருக்கு வாழ்த்துகள்,” என்றார்.
‘அக்யூஸ்ட்’ படத்தில் நடித்துள்ள பவன், பிரபாகர், ஓ மரியா புகழ் டானி, சுபத்ரா, தீபா பாஸ்கர் ஆகியோர் பேசுகையில் இப்படத்தில் பங்காற்றியதற்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, அனைவரின் ஒத்துழைப்போடு ‘அக்யூஸ்ட்’ மிகவும் சிறப்பாக உருவாகியிருப்பதாக கூறினர். படக்குழுவினர் அனைவரும் ஒரு குடும்பம் போல பழகியதாக அவர்கள் தெரிவித்தனர்.
‘அக்யூஸ்ட்’ படத்தின் இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் பேசுகையில், “திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் இங்கு இருக்கிறீர்கள், அனைவருக்கும் மிக்க நன்றி. நான் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை உதயாவிடம் கொடுத்த சிறிது நேரத்திலேயே அவர் அதை முழுவதும் படித்து ஓகே சொன்னதோடு, அவரது வேறு சில படங்களையும் இதற்காக தள்ளி வைத்தார். அதற்காக அவருக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை தந்தனர்.
படம் தொடங்கிய முதல் நாளிலிருந்து படப்பிடிப்பு நிறைவடையும் வரை உதயா தந்த ஒத்துழைப்பு அலாதியானது. அவர் மற்றும் அனைத்து குழுவினரின் ஒத்துழைப்போடு பிரேக்கே இல்லாமல் தொடர் படப்பிடிப்பை நடத்தினோம். இப்படத்தில் இடம்பெறும் பஸ் சண்டைக்காட்சி மிகவும் பேசப்படும். ஒட்டுமொத்த படமும் ரசிகர்களை கவரும், நன்றி,” என்றார். அவரைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் மருதநாயகம்.ஐ மற்றும் கலை இயக்குநர் ஆனந்த் மணி பேசுகையில் படம் சிறப்பாக வந்திருப்பதாக கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.நடிகர் அஜ்மல் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் உதயாவுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி திரையில் தெரியும். அவரை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளலாம். படத்தை சிறப்பாக உருவாக்கிய இயக்குநர் பிரபுவுக்கு நன்றி. நல்ல கன்டென்ட் உள்ள படம் இது. கட்டாயம் ஜெயிக்கும்,” என்றார். மேலும்
நடிகர் உதயா பேசுகையில், “எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார். திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன், ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
‘அக்யூஸ்ட்’ படம் எனது மிக முக்கிய படம். எனது 25வது ஆண்டில் இப்படி ஒரு படம் கிடைத்திருப்பது எனது பாக்கியம். இந்த படத்திற்காக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி. இயக்குநர் அற்புதமாக ‘அக்யூஸ்ட்’ படத்தை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு நன்றி. மிகச்சிறந்த இயக்குநர் அவர். நரேன் பாலகுமார் இசை அருமை. உடன் நடித்தவர்களுக்கும், பணியாற்றிய அனைவருக்கும் மிகுந்த நன்றி. இவர்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள் மாதிரி தான். எங்கள் அனைவரின் உழைப்பில் சிறப்பாக உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ படம் வெற்றி பெறும் என மனமார நம்புகிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்தையும், ஆதரவையும் கோருகிறேன்,” என்றார்.