சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஓய். ஜி மகேந்திரன், சுகாசினி மணிரத்தினம் தலைவாசல் விஜய் ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன் ஆகியோர் நடித்திருக்கும் படம் சாருகேசி..

கர்நாடக இசையில் புகழ்பெற்ற பாடகராக விளங்கும் ஓய். ஜி மகேந்திரன் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு தன்  நினைவுகளை இழக்கத் தொடங்க,  ஏற்கனவே மனக்கசப்பால் தந்தையிடம் இருந்து விலகிச் சென்ற மகனின் உறவு எவ்வாறு புதிய பரிமாணம் பெறுகிறது என்பதையும், மேலும் குடும்பத்திற்குள் பல ஆண்டுகளாக மறைந்து கிடக்கும் புதிர் விடுபட்டு மனம் திருந்தும் மகனின் பாசத்தை இசை எவ்வாறு இணைக்கிறது என்பது தான் மீதி கதை,

படத்தின் மிகப்பெரிய பலமாக அதன் திரைக்கதை. குடும்ப உறவுகளின் அருமையையும், தலைமுறைகளுக்கு இடையிலான புரிதலையும்  எடுத்துரைக்கிறது. குறிப்பாக இறுதிக்கட்ட காட்சிகள் பார்வையாளர்களை ஆழமாகத் தொட்டு மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஒய் ஜி மகேந்திரன் அவர்களின் நடிப்பு அபாரம்.. அவருக்கு அவருக்கு நிகராக ஈடு கட்டும் அதே நடிப்பரசி சுகாசினி மணிரத்தினம்

இசை  –  தேவா, தனது அனுபவத்தை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.  பின்னணி இசை  காட்சிகளின் உணர்வை மேலும் வலுப்படுத்துகிறது. இசையே படத்தின் மிகப்பெரிய பலம்.

சத்யராஜ் தனது அனுபவமிக்க நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். ,

ரம்யா பாண்டியன் பக்குவமான நடிப்பை அள்ளித்துள்ளார்

சிறப்பு தோற்றங்களில் வரும் சமுத்திரக்கனி, மதுவந்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பும் கதைக்கு மிகவும் வலுசேர்க்கிறது

சாருகேசி இதமான இசை…