எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது

கலையரசன், டி. சிவா , ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கமலக்கண்ணன், ஃபைவ் ஸ்டார் கல்யாணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிமாறன் பேசுகையில், ”டார்க் ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படம். மலையாளம் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகும் திரில்லர் திரைப்படங்களை பார்த்துவிட்டு.. இதுபோன்ற படங்கள் தமிழில் வெளியாக வேண்டும் என நினைப்போம். அப்படி ஒரு திரைப்படமாகத்தான் இந்த ‘டார்க்’ திரைப்படம் இருக்கும்.

மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.  

இந்த மாதம் ‘டார்க்’ வெளியாகிறது. அடுத்த மாதம் ‘கராத்தே பாபு’ வெளியாகிறது. அதற்குப் பிறகு ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படம் வெளியாகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ஆதரவு தாருங்கள்,” என்றார்.

‘டார்க்’ திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைக்க, ரவி சக்தி ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பிற்கு கதிரேஷ் அழகேசன் பொறுப்பேற்க, கலை இயக்கத்தை சண்முகராஜா கையாள சண்டைப் பயிற்சியை நைஃப் நரேன் வழங்க, நடன இயக்கத்தை சதீஷ் மேற்கொண்டுள்ளார். பாடல்கள்: யுகபாரதி, விவேக், கணேஷ் கே. பாபு; ஒலி வடிவமைப்பு: அருணாச்சலம் சிவலிங்கம்; ஒப்பனை: முகம்மது; உடைகள் வடிவமைப்பு: காயத்ரி பாலசுப்பிரமணியன்; நிர்வாக தயாரிப்பு: மீனா அருணேஷ்; சவுண்ட் மிக்சிங்: B. முத்துக்கிருஷ்ணன்; டி ஐ: லிக்சோ பிக்சல்ஸ்; கலரிஸ்ட்: ஜி. எஸ். முத்து; ஸ்டில்ஸ்: குமரேசன்: தயாரிப்பு மேலாளர்: பாலாஜி பாபு எஸ்; கோ டைரக்டர்: சதீஷ் சுகுமார்; இணை ஒளிப்பதிவு: கண்ணதாசன் செழியன்; இணை படத்தொகுப்பு: தீபன் சந்திரசேகரன்; இசை லேபிள்: திங்க் மியூசிக்.