
கல்யாண் கே ஜெகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அஜய் கார்த்திக் நடிக்க, அவருடன் முக்கியமான காதபாத்திரத்தில் பாக்கியராஜ் நடித்து வெளிவந்திருக்கும் படம் டார்க்..
பாக்யராஜின் வீட்டின் மாடியில் 3 இளைஞர்கள் குடியிருக்கிறார்கள். இதில் ஒருவர் மற்ற இருவரை கொடூரமாக கொலைசெய்து, தானும் தற்கொலை செய்து கொள்கிறார். இதனை விசாரிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி நட்ராஜ்.
அதன் பிறகு அந்த வீட்டில் யாரும் குடிவர அச்சப்படும் நிலையில், ஆவி-பேய்கள் பற்றிய நம்பிக்கை இல்லாத அஜய் கார்த்திக் அந்த வீட்டுக்கு குடியேற , நள்ளிரவில் சில அமானுஷ்ய விஷயங்களை எதிர்கொண்டு அதிர்ந்து போகிறார். வீட்டை காலி பண்ண நினைக்கையில், பாக்கியராஜ் அவர் மகள் திருமணத்திற்காக, எப்படியாவது வீட்டை விற்க, இந்த பேய் பயம் மக்களுக்கு போக வேண்டும் என்று சொன்னது நினைவில் வர, காலி பண்ண மனமில்லாமல் சமாளிக்கிறார்…
இதற்கிடையில் ஒரு இரவில் பாக்யராஜும், அஜய் கார்த்திக்கும் மர்மமான முறையில் இறந்துபோக, இறந்துபோன அஜய் கார்த்திக் உயிருடன் எழுந்து, நட்ராஜை எச்சரிக்கிறார். தனக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் தன் பெயரை கூறுகிறாரே… என்று அதிர்ந்து போகும் நட்ராஜ் விசாரணையை துரிதப்படுத்த திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகிறது. அவை என்ன? என் பதே திகிலூட்டும் மீதி கதை.
அறிமுக நாயகனாக களமிறங்கி இருக்கும் அஜய் கார்த்திக், . அழுத்தமான கதாபாத்திரத்தை அளவான நடிப்பால் கொடுத்திருக்கிறார்..
அஞ்சனா நேத்ரன், வி.டி.வி.கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் கொடுத்த கதா பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
ரவி சக்தியின் கேமரா வழியாக திகிலூட்டும் இரவை பார்க்க, மனு ரமேசின் இசை அச்சம் தர, டார்க் நம்மை பயமுறுத்தும் ஒரு த்ரில்லிங் படம்…
