
தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வெற்றி, பிரிகிடா, லிசி ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மாறன், கவிதா பாரதி, சுப்பிரமணியம் சிவா, ‘அருவி’ மதன், கன்யா பாரதி
ஆகியோர் நடித்து வெளி வந்திருக்கும் படம் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு..
படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் என்ற ஆசையுடன் இருக்கும் நாயகன் வெற்றி வறுமையின் காரணமாக ஒரு கட்டத்தில் திருடன் ஆகிறான். ஒரு திருட்டின்போது அவ்வூர் பண்ணையார் லட்சுமிகாந்தனைக் கொலை செய்துவிட்டு மரண தண்டனைக்காக காத்திருக்கிறான். காரணம் பின் நோக்கி செல்ல, திருடும் போது அவ்வூரின் பண்ணையாரைக் கொலை செய்ய நேரிடுகிறது… அதன் பின்புலம் என்ன என்றும்
தூக்கிலிடுவதும் அரசு செய்யும் கொலைதான் என்று ஆவேசப்படும் வெற்றிக்கு இறுதியில் என்ன ஆனது?
என்பதே லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.
வெற்றி கொடுத்த கதாபாத்திரத்தில் மீட்டர் குறையாமல் நடித்திருக்கிறார், ( பேசி இருக்கிறார் )
பிரிகிடா சகா ஒப்பனை இல்லாமலும் அழகாக தெரிகிறார். சிறந்த நடிப்பும் கூட..
இயக்குனரின் ஸ்கிரிப்ட் கு ஏற்ப கவிதா பாரதியின் வசனம் மிக சிறப்பு..
நடிகர் தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் கதைக்கு பலம்.. மொத்தத்தில் லட்சுமி காந்தன் கொலை வழக்கு ஒரு அருமையான நாவல்
