
7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க கவின், நயன்தாரா நடித்து வெளிவந்திருக்கும் படம் “ஹாய்”.
இவர்களுடன் பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு சுகாசினி, வி டிவி கணேஷ் அறிவு ஆகியோர் நடித்து ள்ளனர்
அப்பா பாக்கியராஜ் அம்மா ராதிகா போல் தானும்
காதலித்து தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கவின், தன் மாமன் மகளிடம் காதலை சொல்ல, அந்தக் காதல் கை கூடாமல் போகிறது. வீட்டில் அனைவரும் அந்த காதலி யார் என்று கேட்க தனது மாமன் மகள் தான் என்பதை சொல்ல முடியாமல் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வருகிறார் கவின்..
மறுபுறம் பிறந்தது முதல் அம்மா முகத்தை பார்க்காத, அப்பாவின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் வளரும் நாயகி நயன்தாரா, திருமண பந்தத்தில் சிக்கி விடாமல் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பி, அவரும் சென்னையில் இருக்கும் தன் தோழியின் உதவியை நாடி வருகிறார்.
வீட்டை விட்டு ஓடி வந்த நயனும், கவினும் சென்னையில் சந்தித்துக் கொள்கிறார்கள். நட்பாக பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் நயன்தாரா வை காதலிக்க தொடங்க, நயன்தாராவிற்கோ கல்யாணம் மீது நம்பிக்கை இல்லாமல் வெளிநாடு செல்ல திட்டமிடுகிறார்.
இதற்கிடையே, கவினும், நயன்தாராவும் கணவன் – மனைவியாக சில மாதங்கள் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாக, இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட கவின், நயன்தாராவை தன் காதல் வலையில் வீழ்த்தினரா? இல்லையா என்பதே கதை.
கொங்கு தமிழ் பேசி நடித்திருக்கும் கவின், மிக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.. அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான நடிப்பை கொடுத்து ரசிக்க வைத்துள்ளார்.
கிராமத்து பெண் ஆக பாவாடை தாவணி யில் அழகாக வலம் வருகிறார் நயன்தாரா..பக்குவமான நடிப்பு..
கவினின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, அப்பாவாக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் பிரபு, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பிணை கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, ஜென் மார்ட்டின் இசை படத்துக்கு பக்க பலம்..
ஒரு அழகான காதல் கதையை கவிதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணு எடவன்
