
பான் இந்தியா படமாக யஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்
“டாக்ஸிக்”
கீது மோகன் தாஸ் மற்றும் யஷ் உருவாக்கத்தில் வெளிவந்திருக்கும் டாக்ஸிக் திரைப்படத்தில் யஷ் உடன் கியாரா அத்வானி, ஹுமா குரோஷி, நயன்தாரா, தாரா சுதாரியா, ருக்மனி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்..
இந்தியா வின் விடுதலைக்கு பிறகும் கோவாவில் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கம் தொடர்ந்து இருந்து வந்தது… யாராலும் அழிக்க முடியாத சிம்மசொப்பனமாக விளங்கிய சால்வாடர் அவருக்கு துணையாக ராயா (யஷ்), அவரது அக்கா கங்காவும் (நயன்தாரா) உள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலில் அனைவரையும் வீழ்த்தி அடுத்த கட்டத்திற்கு செல்லும் கங்கா, ரா யாவிடம் என் ஆசை இந்த உலகத்தையே நீ ஆள வேண்டும் என்று கூறுகிறார், எப்போதும் போதை, மது, பெண்கள் என டாக்ஸிக் ஆக,வாழும் ராயா, அக்கா கங்கா சொன்னபடி இந்த உலகத்தை ஆள்கிறாரா? இல்லை அனைத்து போதைகளிலும் மீண்டு அவரின் வாழ்க்கை மாறியதா என்பதே கதை…
பெண் இயக்குனரிடம் இருந்து சற்றும் எதிபாராத ஆக்ஷ்ன் மற்றும் எமோஷனல் டிராமாவாக இப்படத்தைக் கொடுத்துள்ளார். முதல் பாதியில் ராயா என்ற கதாபாத்திரம் எந்த அளவிற்கு டாக்ஸிக் என்பதை ஒவ்வொரு ஃபிரேமிலும் வெளிப்படுத்தி உள்ளார்
டெக்னிக்கலாக படம் மிரட்டலாக பிரம்மாண்டமாக உள்ளது. 1947, 1960களின் காலகட்டத்தில் கோவாவில் இருப்பது போன்ற உணர்வை கலை இயக்குனர் கொடுத்துள்ளார்..
ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும், வசனங்களுக்கும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
படத்தின் ஆரம்பத்திலேயே இது எந்த மாதிரி கதை என்று சொல்லி தலைப்பையும் டாக்ஸிக் என்று வைத்துள்ளாதல் படம் அதற்கு ஏற்றார் போல் உள்ளது.மேக்கிங் அருமை.
