
இயக்குனர் சரஜ் சீலன் இயக்கத்தில்
குரு சோமசுந்தரம், அனு மோல், விஜய் விஷ்வா, அர்ச்சனா நடிபில் வெளிவந்திருக்கும் படம்.. “பாரிஸ் கஃபே”
பாரிஸ் சில் இருக்கும் அர்ச்சனா தனது அம்மா அப்பா இருவரும் தற்காலிகமாக பிரிந்து வாழ்வைதை கேட்டு அதிர்ச்சியடைந்து ஆண் நண்பருடன் இந்தியா வருகிறார். இங்கிருந்து கதை தொடர்கிறது.
அரசு மருத்துவரான குரு சோமசுந்தரமும், கட்டிடக்கலை நிபுணர் மற்றும் சமூக சேவகியுமான அனுமோலும் காதலித்து திருமணம் செய்து அந்யோன்யாமாக வாழ்ந்து வருபவர்கள்.
இச்சூழ்நிலையில் மருத்துவ கருத்தரங்கம் ஒன்றுக்காக பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிஸுக்கு செல்லும் குரு சோமசுந்தரம், அங்கிருக்கும் கஃபே ஒன்றில், சென்னையை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் அழகான புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அந்த புகைப்படம் குறித்து விசாரிக்க, புகைப்பட நிபுணர் ஐ சென்று சந்தித்து அவர்கள் பற்றி அறிந்துக் கொண்டு சென்னை வருகிறார்…. அதே பதட்டத்துடன் சென்னை திரும்பியவர், தன் மனைவியிடம் அந்த காதல் ஜோடி பற்றிய உண்மைகளை சொல்வதோடு, அவர்கள் இப்போது உயிருடன் இல்லை, தான் தான் அவர்களை போஸ்ட்மார் டம் பண்ணியவன் என்றும் ஒரு இக்கட்டான சூழ்நிலை யில் தவறு புரிந்து விட்டதாகவும் சொல்கிறார்.. அதைக் கேட்டு அனு மோல் அவரைத் பிரிந்து சென்று விட அந்த தவறு என்ன? அதை தீர்த்து அ வர்கள் இருவரையும் சேர்த்து வைத்தனரா? என்பதே மீதி கதை..
எப்பொழுதும் தன் அளவான நடிப்பால் திரையை ஆட் கொண்டு விடுகிறார் குரு சோம சுந்தரம்..
ஆணவ படுகொலைக்கு உடந்தையாக இருந்த தன் கணவர் மீது கோப பட்டு வெகுண்டெ ழும்போதும் சரி, அதற்கான நியாயத்தை தேடும் இடத்திலும் சரி பக்குவமான நடிப்பை கொடுத்திருக்கிறார் அணுமோல்.
இளம் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் விஜய் விஷ்வா மற்றும் அர்ச்சனா, காதல் கா ட்சிகளில் புத்துணர்ச்சியோடு நடிக்க, மற்றொரு ஜோடியான சாய் விக்கி மற்றும் நயனா சாய் இருவரும் கணமான காதபாத்திரத்தை கையாண்டுள்ளனர்..
சதிஷ்.ஜி ஒளிப்பதிவில் கே.இசையில் பாடல்கள் அருமை.
ஆணவக் கொலைக்கு எதிராக குரல் கொடுத்தமைக்கு இயக்குனரை பாராட்டலாம்
