V6 Film Pvt Ltd வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் இயக்கத்தில் சமூக அக்கறையோடு வந்திருக்கும் திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’.

இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

துப்புரவு தொழிலாளியாக இருக்கும் அபர்நதி (வெள்ளையம்மா) தன் மகன் நந்தன் ஐ படிக்க வைத்து பெரிய வக்கீல் ஆக்க வேண்டும் என்று கணவுடன் இருக்க, மகன் நந்தனுக்கோ சதுரங்க விளையாட்டில் ஜெயித்து கிராண்ட் மாஸ்டர் சான்றிதழை வாங்க வேண்டும் என்று ஆசை.
அதற்கு முட்டு கட்டையாக தனது சாதி இருக்க, பண பலம் கொண்டவர்கள் இவன் சமூகத்தை காரணம் காட்டி, நந்தனை ஒடுக்க, அதனை முறியடித்து அம்மாவின் கை பிடித்து அந்த உயரத்தை எட்டுவதே… மீத கதை..

ஏழை எளிய துப்புரவு தொழிலாளியாக நடித்திருக்கிறார் அபர்நதி. சாதி பாகுபாட்டால் அவமானம் அடைவது, ஊர் மக்களிடம் அடமானம் வைத்த தன் கணவனை மீட்க யுக்தி யுடன் ஆடுபுலி ஆட்டம் ஆடி வெல்லுவது, அதே சாதி பாகுபட்டால் தன் மகனை பள்ளிக்கூடத்தில் இழிவாக நடத்தும் இடத்தில் சீறி பாய்ந்து ஆசிரியரை எச்சரிப்பது போன்று பல இடங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சாதி வெறியர்களால், அடிபட்டும் உதைப்பட்டும் ரத்தம் சிந்தி சாதிக் கட்டுப்பாட்டை உடைத்தெறிய பரிதவிக்கும் கதாபாத்திரமாக லிங்கேஷ் நடித்துள்ளார்.

சிறுவனாக நடித்திருக்கும் நந்தன் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார்

அனல் தெறிக்கும் வசனங்கள் என்னற்றவை

படத்திற்கு அர்ஜுன் ரவி – ஞானசேகர் ஆர்.எஸ். ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார். ரஞ்சீத் சி.கே. படத்தொகுப்பும் சிறப்பு..
என்றும் மாறா சமூக காட்டமப்பை, எப்படியாவது மாற்ற வேண்டும் என்று தன் படைப்பின் மூலம் சொல்ல நினைத்த இயக்குனருக்கு பாராட்டுகள்..