
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில்
நயன்தாரா ரெஜினா கேசன்ட்ரா, துணியா விஜய் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன் 2
சென்னையில் காவலராக பணியாற்றும் நயன்தாராவை சுற்றி பல அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்க, அதன் பின்னணி குறித்து அறிவதற்காக மயிலாஞ்சி என்ற ஊருக்கு செல்கிறார்கள் தாய் ஊர்வசி மற்றும் நயன்தாரா..
நயன்தாராவின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ, அவர் தான் மூக்குத்தி அம்மன் என்ற உண்மை வெளி வர மூக்குத்தி அம்மனை பழிவாங்குவதற்காக அதே ஊரில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதியடைந்த சாத்தான் ரெஜினா கசன்ட்ராவும் உயிர்த்தெழுந்து அவர் முன்னாள் கணவர் துணியா விஜய் யுடன் பழி வாங்க துடிக்கிறார்..
இறுதியில், வென்றது சாத்தானா அல்லது தெய்வ சக்தியா ? என்பது தான் ‘மூக்குத்தி அம்மன் 2’-வின் கதை.
’மூக்குத்தி அம்மன்’ படத்திற்கும் ’மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்கும் நயன்தாராவை தவிர வேறு எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.
முற்றிலும் புதிய கதையாக, உருவாகியிருக்கும் இதில் காட்சி மொழியினை பிரம்மா ண்ட படுத்தியிருக்கிறார்கள்.
காவலராக எளிமையாகவும், இயல்பாகவும் நடித்து கவனம் ஈர்க்கும் நயன்தாரா, மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் அமைதியாக மட்டும் இன்றி ஆக்ரோஷமாகவும் நடித்து மிரட்டியிருக்கிறார்.
மூக்குத்தி அம்மனை அழிக்க துடிக்கும் சாத்தானாக நடித்திருக்கும் ரெஜினா கசன்ட்ரா, கம்பீர அழகி.
ரெஜினா கசன்ட்ரா கணவராக நடித்திருக்கும் துனியா விஜய், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நயன்தாராவின் அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி மற்றும் யோசி பாபு கூட்டணியின் காமெடி காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.
மைனா நந்தினி, கருடா ராம், அபிநயா, ஸ்ருதி.எஸ், சிங்கம்புலி, வி.ஆர்.சுவாமிநாதன், சிவகுமார்.எஸ், சுனில் வர்மா ஆகியோர் கொடுத்த கதா பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்..
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் அம்மன் அருளை போற்றும் வகையில், படம் பார்ப்பவர்களையும் சாமியாட்டம் போட வைக்கிறது.
ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பு மற்றும்
வெங்கட் ராகவனின் திரைக்கதை , தற்போதைய தொழில்நுட்பத்தால் பார்வையாளர்களை அதனுடன் ஒன்றிவிட செய்து விடுகிறது.
மொத்தத்தில் மூக்குத்தி அம்மன் 2 புதிய தொழில் நுட்பத்துடன் ப்ரம்மாண்ட விருந்து..
