
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணா, சுராஜ், எஸ். ஜே. சூர்யா, வித்யா பாலன், யோகி பாபு, நமோ நாராயணன் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், வெளிவந்திருக்கும் படம் ஜெயிலர் 2.
ஜெயிலர் முதல் பாகத்தில் வர்மன் இறக்கும்போது, ‘இது மிகப்பெரிய நெட்வொர்க்; என்னை கொலை செய்துவிட்டு உன்னால் நிம்மதியா இருக்க முடியாது; என் பின்னால் ஒரு உலகமே இருக்கு ஜெயிலர்’ என கூறியிருப்பார்.. அந்த வசனத்தின் தொடக்கமே ஜெயிலர் 2..
டைகர் முத்துவேல் (ரஜினி )பாண்டியன், நமோ நாராயண னிடம் டிரைவர் ஆக வேலைக்கு சேர, அந்த வழியாக சிலை கடத்திய யோகி பாபு போக, அவரை இழுத்து வண்டிக்குள் போட்டு சிலை கடத்த சொன்ன சுராஜ் ஐ தேடி போக,
சுராஜ் ஐ வைத்தே அவருக்கும் மேல் உள்ள சிலை கடத்தல் கும்பலின் பாஸ் ஆன
கல்பக் குடும்பத்தினர் (எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவத்தி) ஐ தேடி அழிப்பதே மீத கதை…
ரஜினி, ரஜினி, ஒன்லி ரஜினி…படம் முழுக்க ரஜினிசம்…படத்தில் வரும் பாடல் வரிகள் போல் இன்னைக்கும் என்னைக்கும் ஒரு தலைவன்தான் என்பது போல், படத்தில், தான் தோன்றிய முதல் காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை. நின்றால் மாஸ், நடந்தால் க்ளாஸ் என ரஜினி கதாபாத்திரதை பார்த்து பார்த்து செதுக்கி வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். தலைவர் திமிங்கிலம் தாங்கோ..
நமோ நாராயணன், யோகி பாபு, ரஜினிகாந்த் காம்போவில் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் பிளாஸ்ட். அதிலும் நமோ நாராயணன், சுராஜ் செஸ் ஆட்டம் வேற லெவல் கான்பிடென்ட் காட்சி…
எஸ். ஜே. சூர்யா அரக்கதனமான நடிப்பு.. வித்யா பாலன் ரஜினிக்கு எதிரான திமிரான நடிப்பு, அவரையும் கவர்ந்த இழுத்த தலைவர்…
அடுத்து மாஸ் அனிருத், ஒரு பக்கம் தலைவர், அவருக்க தோதான பின்னணி இசை… Padam முழுவதும் கலக்கல்.
இறுதியாக நெல்சன் டச்… எந்த நடிகரை வைத்து இயக்குகிரா ரோ… அவருக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இயக்குவது அவரின் தனி சிறப்பு… ஜெயிலர் 2 சூப்பர்…
