
அமுதா லியோனி, லெனின் மாதேஸ்வரன் (ASASI Creations, Chandi Talkees) தயாரிப்பில்
லியோ சிவகுமார், ராதிகா சரத்குமார், பிரிகிடா சகா, காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்யந்த் ஆகியோர் நடித்து வெளி வந்திருக்கும் படம் “டெலிவரி பாய்”
இயக்கம் – நானி தர்லா
இசை – கே.எஸ். சுந்தரமூர்த்தி
காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற லட்சிய கனவுடன் பயணிக்கும் இளைஞர் சிவா (லியோ சிவகுமார்), குடும்பச் சூழல் காரணமாக உணவு டெலிவரி செய்யும் பணி செய்து வருகிறார், தன் தாயார் லட்சுமி (ராதிகா சரத்குமார்) க்கு ஒரு விபத்து ஏற்பட
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தாயின் சிகிச்சைக்குப் பெரும் தொகை தேவைப்படும் நிலையில் பணத்தைத் திரட்ட வழியின்றித் தவிக்கும் சிவா, சூழ்நிலையின் கட்டாயத்தால் வேறு ஒரு தவறான பாதையை தேர்ந்துதெடுக்கிறார்.. . சில மாதங்களுக்குப் பிறகு, தான் செய்த அந்தச் செயலின் குற்ற உணர்வால், ஒரு நபரை தேடி செல்ல, அவர் ஒரு கொலைக் குற்றத்தில் சிக்கியிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார். அவர் ஒரு நிரபராதி என்று அறிந்து எப்பாடு பட்டாவது காப்பாற்றப் போராடும் அவரின் போராட்டம் மற்றும் அவரின் இலட்சிய கனவு பற்றிய பரபரப்பான கதையே டெலிவரி பாய்.
கதாநாயகனாக நடித்துள்ள லியோ சிவகுமார், தாயின் உயிருக்காகத் தவிக்கும் பாசமிகு மகனாக, பிரிகிடா தன் வாழ்க்கையில் வரவேண்டும் என்று காதலுடன் ஏங்கும் இடத்திலும் சரி, பிற்பாடு தன் நண்பனுக்காக போராடும் இடத்திலும் சரி நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்..
தாயார் லட்சுமியாக நடித்துள்ள ராதிகா சரத்குமார், மகன் மீதான அன்பையும் உடல்நலப் பாதிப்பின் வலியையும் தனது அனுபவ நடிப்பால் திரையில் தத்ரூபமாக வெளிப்படுத்தியி ருக்கிறார்..இன்னும் அதிகமான காட்சிகள் இருந்திருக்கலாம். மற்றபடி பிரிகிடா சகா, காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட் மற்றும் துஷ்யந்த் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்க ப்பட்ட வேடங்களை நிறைவாகச் செய்துள்ளனர்.
பாசம்,காதல், நட்பு, ஆக்ஷன் காட்சிகள் என்று அனைத்தையும் ஒன்று சேர்த்து கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் நானி.
பினிக்ஸ் பிரபு வின் சண்டை காட்சிகள் மிரள வைக்கிறது.
அசோக்குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ். குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்..
டெலிவரி பாய் திருப்பங்கள் நிறைந்த கதை.
