
ரவுடி பிக்சர்ஸ் & 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்க விதி சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கீர்த்தி செட்டி எஸ் ஜே சூர்யா மாளவிகா ஆகியோர் நடித்துவெளிவந்திருக்கும்
படம் எல்ஐகே “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி”
இயக்கம் – விக்னேஷ் சிவன்
இசை – அனிருத்
கதை 2040 இல் காதலர்கள்.. அவர்களின் காதலை மெஷர் செய்யும் ஒரு ஆப் (app)..வர,
காதலர்களுக்கு மத்தியில் இருக்கும் காதல் உண்மையானதா? பொய்யானதா? அவர்களின் காதலை ஆரம்பத்தில் இருந்து வேவு பார்த்து, சொல்லு ம் மோதிரம் போன்ற டிவைஸை ஐ மீடியம் ஆக்கி LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பனி).. யை, சூர்யன் (எஸ்.ஜே. சூர்யா) உருவாக்கி மிகப்பெரிய முதலாளி யாகிறார்..
சூரியனின் கம்பெனியில் டிவைஸுக்கு குரல் கொடுக்கிறார் வாசு என்கிற வைப் வாசி (பிரதீப் ரங்கநாதன்). மொபைல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் பசுமை இல்லத்தை நடத்தும் சீமான் அவர்களின் மகன்…
குழந்தைப் பருவத்தில் இருந்தே, வீடியோஸ், ரீல்ஸ், லைக்ஸ், ஷர்ஸ் என்று அத்தனையும் விரும்பி.. போன் இல்லையேல் வாழ்க்கை இல்லை என்று வளரும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் தீமாவுக்கும் (க்ரித்தி ஷெட்டி) வாசுவுக்கும் காதல் மலர அவர்கள் லவ் மீட்டர் டிவைஸ் ஐ வைத்து சோதிக்க, அது 3 சதவீதம் தான் காதல் இருப்பதாக காட்டுகிறது.. இதனால் வாசுவுக்கு நோ சொல்லிவிட்டு தீமா செல்ல, ஆப்பை இதயத்தின் எமோஷன் தான் பெரிது. அதை எந்த ஆப் பாலும் அளவிட முடியாது என்று நிரூபிக்க அவர் படும் பாடே “எல்ஐகே” படத்தின் கதை.
ஹீரோவாக வரும் பிரதீப் ரங்கநாதன் வழக்கமான துறுதுறு நடிப்புடன் எப்போதும் போல் நடித்திருக்கிறார்..
நாயகி கிர்த்தி ஷெட்டி அழகு.. தீமா தீமா பாடலில் அத்தனை அழகு..நீண்ட இடை வெளிக்கு பிறகு வாளமீனு மாளவிகா நாயகிக்கு அம்மாவாக வருகிறார்..இன்னமும் பயன்படுத்தி இருக்கலாம்.. பாசமிகு அப்பாவாக சீமான்…
படத்தின் சிறப்பு.. எஸ். ஜே. சூர்யா.. ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை நடிப்பு, காஸ்ட்யூம், டயலாக் என, அத்தனையும் சுருட்டி தன் கையில் வைத்துள்ளார்…
AI காட்சிகள் அருமையாக படாமக்கபட்டுள்ளது… ரவி வர்மனின் ஒளிப்பதிவு, மற்றும் அனிருத் இன் இசை படத்திற்கு பக்க பலம்…
காதல் படத்தில், எமோஷனல் இல்லாமல் AI காதல் ஆக இருப்பதால் அணைத்து தர மக்களையும் கவருவது கொஞ்சம் கடினம்…
