குஷ்பூ சுந்தர்.C இணைந்து  தயாரித்திருக்கும் படம் டபுள் ஆக்குபன்சி.

அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கி நாயகனாக அறிமுகமாகியி ருக்கிறார் சந்தோஷ் இவருக்கு ஜோடியாக ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா, போஸ் வெங்கட், வினோதினி ஆகியோர் நடித்திருக்கும்

வித்தியாசமான, ஜாலியான சயின்ஸ் பிக்சன் பேண்டசி ரொமாண்டிக் டிராமா.


திருமணம் ஆகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் தவிக்கும் போஸ் வெங்கட் வினோதினி தம்பதி.  கடவுள் நம்பிக்கையே இல்லாத கணவன் ஒரு கட்டத்தில் கடவுளை மனமுருகி வேண்ட ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.  குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே இறந்தும் விடுகிறது. அந்தத் தம்பதி மீண்டும் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய  கடவுள் அருளால் உயிர் பெறுகிறது.. அதில் ஒரு அவஸ்தையான ஆச்சரியம் என்னவென்றால் குழந்தை 6 மணி வரை பெண் குழந்தையாகவும்  6 மணிக்கு மேல் ஆண் குழந்தையாகவும் மாறி விடுகிறது.. …

ஆண், பெண் இரண்டுக்கும் பொதுவான ரஜினி என்ற பெயருடன் வளர்கிறார்கள்.

வளர்ந்த பின் சந்திக்கும் நடைமுறை வாழ்க்கை சிக்கல்களை கொஞ்சம், ஜாலியாக, கமர்சியலாக சொல்லி இருக்கிறார்கள்.

பெண் ரஜினி ஆக ரேஷ்மாவும் ஆண் ரஜினி ஆக சந்தோஷம் நடித்திருக்கின்றனர்.. சந்தோஷின் உடல் மொழி மற்றும்  கதாபாத்திரத்திற்கான மெனக்கெடல் உயிர்ப்பு டன் இருக்கிறது. 

ஆண் ரஜினியின் காதலியாக வரும் சம்யுக்தா கலக்கலாக நடித்திருக்கிறார்

அதே போல் நாயகியின் காதலனாக வரும் வினோத் கிஷன் உயிர்பான நடிப்பு திரையில் இதுவரை பார்த்திராத நடிப்பு..

விடிவி. கணேஷ் ,பகவதி பெருமாள் இருவரின் பங்களிப்பும் அருமை.

ஒளிப்பதிவு சாந்தகுமார். கலக்கல்

எடிட்டிங் பிரவீன் ஆண்டனி.  சாம் சி.எஸ்சின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓகே..

மொத்தத்தில் தியே ட்டரில் ஜாலியான கபுள் ஆக்குபன்சியை எதிர்பார்க்கலாம்…