
வெங்கடேஷ் மஹா இயக்கத்தில் சத்யதேவ் நடிக்க பெரிய பட்ஜெட்டில் சைக்கோலாஜிக்கல் டிராமா ஆக வந்திருக்கும் படம் ராவ் பகதூர்
படத்தின் ஆரம்ப கா ட்சிகளிலயே அசத்தலான கதை தொடங்கிவிட்டது.. 1991ஆம் ஆண்டில் புவனாலயம் அரண்மனையில், அரசு குடும்ப வாரிசான ராமப்பா ராவ் பஹதூர்.நோய் வாய் பட .. அவரது மனைவி ரேணுகா வோ பல ஆண்டுகளாக அவருடன் பேசாமல் வேறொரு அறையில் இருக்க, அச்சம்மா என்ற பணிப்பெண் மட்டும் தன் மருமகளோடு வீட்டு வேலைகளை செய்து கொண்டு அவரையும் பார்த்து வருகிறார்.
ஒருநாள் ராமப்பாவின் உடல்நிலை மிகவும் மோசமடைய , அவரது நண்பரான டாக்டர் ஆச்சாரி மருத்துவம் பார்க்க அரண்மனைக்கு வருகிறார்.
தனது நண்பன் மனநலம் பாதிக்கப்பட்டு பேச, தனது மனதினை அரிக்கும் சந்தேகத்தை அவர் முன் வைக்கிறார். அதற்கு மழுப்பலாக ஆச்சாரி பதில் அளிக்க, ராமப்பா தான் செய்த ஒரு விஷயத்தை கூறி சில பொருட்களை முன் வைக்கிறார்.
அதனைப் பார்த்து ஆச்சாரி அதிர்ச்சி யடைந்து, எப்படியாவது எனக்குள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று ராமப்பா கூற,, அவரது சந்தேகம் தீர்ந்ததா? அவரது மனைவி ஏன் பல ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறார்? போன்ற கேள்விகளுக்கு பதில்தான் மீதிக்கதை.
ராமப்பா ராவ் பஹதூராகவே ஆகவே வாழ்ந்திருக்கிறார். சத்யதேவ்..வயதான கதாபாத்திரத்தை அவ்வளவு கச்சிதமாக சிறப்பாக செய்துள்ளார்.
ஆச்சாரியாக வரும் விகாஸ் முப்பாலா ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து அசத்துகிறார். அச்சம்மாவாக வரும் பாலா பரசர் காமெடியில் பின்னியிருக்கிறார். ஐபிஎஸ் அதிகாரியாக சில காட்சிகளில் வந்தாலும் ஆனந்த் பொருத்தமாக இருக்கிறார்..
சமரன் சாயின் இசை, கார்த்திக் பர்மரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலன்…
