தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்செயன் தயாரிப் பில் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவீஷ், நாக துர்கா, செல்வராகவன், வனிதா விஜயகுமார், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் லவ் ஓ லவ்

படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு துபாய் தப்பி செல்வதாக இன்ஸ்பெக்டர் செல்வராகவன் பவிஷை கைது செய்ய அங்க வந்த மாதர் சங்க தலைவி வனிதா விஜயகுமார் பவிஷுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என போராட, பவிஷ் தன் கதையை செல்வராகவனிடம் சொல்கிறார்

பவிஷ் நாக துர்காவை காதலித்து வரும் நிலையில் காதலியின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்ற தனது சம்பள பணத்தை அவருக்கு செலவழிக்கிறார்.. அது பத்தாமல் கிரெடிட் கார்டு வாங்கி, செலவழிக்க அதுவும் பத்தாமல் நண்பர்களிடமும் கடன் வாங்குகிறார். இப்படி கடன் வாங்கி செலவழிக்கும் அவரை அவர் தந்தை கே. எஸ். ரவிக்குமார் சிறிதும் விரும்பாமல் ஊருக்கு சென்று விடுகிறார்..கதாநாயகியோ தன்னால் தனது காதலன் கடன் படுகிறார் என்பதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் செலவு மேல் செலவு வைக்கிறார். கடனாளி ஆனாலும் தனது காதலியின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறார் பவிஷ். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் அது தோல்வியில் முடிய , இவர்கள் இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. காதலியின் இம்சை தாங்காமல் இன்ஸ்பெக்டரிடம் பிரேக் அப் லெட்டர் கேட்கிறார் பவிஷ்.. நாயகி மறுக்கவே
கடந்த நான்கு ஆண்டுகளாக காதலியை தான் எப்படிப் பார்த்துக் கொண்டேனோ, அதேபோல் காதலி யும் தன்னை ஒரு நான்கு மாதமாவது பார்த்துக் கொள்ள வேண்டும், தனது கடன்களை எல்லாம் அடைக்க வேண்டும். அப்படிச் செய்தால் நான் அவருடன் சேர்ந்து வாழ்கிறேன். என்று இன்ஸ்பெக்டர் செல்வராகவனிடம் கூறுகிறார்.அவரால் முடியவில்லை என்றால் பிரேக்அப் தான் என்ற ஒப்பந்தம் செல்வராகவன் முன்னிலையில் போடப்படுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.

பவிஷ் மற்றும் நாக துர்கா கொடுத்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர்..

பவிஷிடம் அப்படியே தனுஷ் சாயல். ஒரு சில இடங்களில் வாய்ஸ் கூட அவரை போலவே வந்து செல்கிறது.

பி. ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு அருமை.

2k கிட்ஸ் ன் பிரேக் அப், பட்ச் அப் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டி ருக்கிறது இப்படம்.