
இயக்குநர் நிஷாம் பஷீர்
இயக்கத்தில் பிரித்விராஜ், பார்வதி திருவொத்து, ஹக்கீம் ஷாஜஹான் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஐ நோபடி.
கையில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் ராஜீவன் நுழைய, அங்கு ஏற்கெனவே வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் மூவர், அவனை கண்கட்டி கடத்துவது என்று ஆரம்பமே த்ரில்லிங்..
ஒரு சாதாரண அரசு ஊழியரான ராஜீவன் தற்செயலாக வங்கிக் கொள்ளை ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். அந்தக் கொள்ளை சம்பவம், மனைவி மீரா வை மிகவும் காயப்படுத்துகிறது தன் இரு பெண் குழந்தைகள் கொண்ட அவரது வாழ்க்கையை கொள்ளை சம்பவம் தலைகீழாக மாற்றி விடுகிறது. அக்கம் பக்கத்தினர் மற்றும் சமூகத்தினரால் மிகவும் காயப்பட்டு போகின்றனர் விருப்பமில்லாத திருப்பங்களால் குடும்ப வாழ்க்கை தடம் புரள அவர்களது வாழ்க்கையும், கொள்ளை போன பணமும் என்ன ஆனது என்பதே கதை.
பிரித்விராஜ் வழக்கமான ஹீரோயிசம், காட்டாமல் பதற்றம், இயலாமை ஆகிய உணர்வுகளை உடல்மொழியால் மிக நேர்த்தியாக நடித்து அசத்தியிருக்கிறார்.
பார்வதி திருவொத்து கணவரின் செயல்களால் சிக்கலில் தவிக்கும் மனைவியாக உணர்வுபூர்வமான நடிப்பை வழங்கி கவனம் ஈர்க்கிறார்.
போலீஸ் கான்ஸ்டபிளாக எதிர்மறை கதாபாத்திரத்தில் ஹக்கீம்ஷாஜகானும் உடல்மொழி மற்றும் கண் அசைவுகளால் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
முதல் பாதியின் விறுவிறுப்பான காட்சியும், நேர்த்தியான ஒளிப்பதிவும், அட்டகாசமான படத்தொகுப்பும் படத்திற்கு பலம்..
மொத்தத்தில் ஐ நோபடி பரபரப்பான திரைப்படம்.
