
( Fortune Four Cinemas ) சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சூர்யதேவர நாக வம்ஷீ- சாயி சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் கலையரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் முன்னிலையில் கோலாகலமாக திருவிழா போல் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்ஷீ , இயக்குநர் வெங்கி அட்லூரி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், நடிகர் சூர்யா, நடிகை மமீதா பைஜூ, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ், தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் என பலர் கலந்து கொண்டனர்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பேசுகையில், ” மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த ‘வாத்தி’ படத்திற்குப் பிறகு, மீண்டும் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்ஷீ- சாயி சௌஜன்யா க்கு நன்றி.
‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் மிகவும் ஸ்பெஷலானது. சூர்யாவின் ‘சூரரை போற்று’ படத்திற்குப் பிறகு நானும் அவரும் இணைந்து பணியாற்றிருக்கிறோம். ‘சூரரைப் போற்று’ திரைப்படம் – எங்கள் இருவருக்கும் முதன்முறையாக தேசிய விருதை வழங்கிய படம். அந்த அளவிற்கு அதிர்ஷ்டம் அளித்த கூட்டணி.
அந்த தருணத்தில் சூர்யா சார் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய உதவியை செய்தார். அதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.
அதன் பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் உருவான ‘வாத்தி’ திரைப்படத்திற்கும் எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு அவரது இயக்கத்தில் ‘லக்கி பாஸ்கர்’ என்ற ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தில் இணைந்தோம். அதை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறோம். இதனால் இந்த படத்தில் என்னுடன் இரண்டு ஸ்பெஷல் ஃபோர்ஸஸ் இருக்கிறார்கள்.
இந்தப் படம் நீங்கள் மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் இணைந்து பார்க்க வேண்டிய படம். ஒரு பீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர். சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும். இன்று சூர்யாவின் ரசிகர்களுக்காக அவர்கள் விரும்பிய தி ஒன் (The One) பாடலை வெளியிடுகிறோம். அது சூர்யாவின் அன்பான ரசிகர்களுக்கான ஆக்ரோஷமான பாடல்.
நடிகை மமீதா பைஜூவை நான் ஐந்து ஆண்டுகளாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் அன்பானவர். ‘பட்டாம்பூச்சி’ பாடலை அவர் தன்னுடைய நடனத்தின் மூலம் மெருகேற்றியுள்ளார். இந்த பாடல் வெளியான பிறகு அவருடைய நடனத்திற்கு கிரேஸ் அதிகமாகிவிட்டது.
சமூக ஊடகங்களில் அவருடைய நடன அசைவுகளை ரீ கிரியேட் செய்து வருகிறார்கள். இந்தப் படத்தில் அவர் தன்னுடைய கடின உழைப்பை வழங்கியிருக்கிறார். அவருக்கு நன்றி.
இவற்றையெல்லாம் கடந்து சூர்யா சார். இந்த படத்தில் எமோஷனலாக… அழகாக… அற்புதமாக …நடித்திருக்கிறார். இது அனைவருக்கும் பிடிக்கும். சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்க்கலாம். இந்தப் படம் ஒரு இதயபூர்வமான படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
நடிகர் சூர்யா பேசுகையில், ” கோவை விமான நிலையத்திலிருந்து இந்த விழா நடைபெறும் இந்த தருணம் வரை இதனை ஒரு திருவிழாவை போல் கொண்டாடிவரும் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் மீது நீங்கள் வைத்திருக்கும் இந்த அன்பிற்கு நன்றி.
ஒரு காரணத்திற்காக நான் என் பிறந்த நாளை கொண்டாடவில்லை. இருந்தாலும் ரசிகர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்… என்ன செய்தீர்கள்… என்பதை நான் கவனித்துக் கொண்டே தான் இருக்கிறேன். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானத்தை வழங்கியுள்ளீர்கள். நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறீர்கள். குட்டி குழந்தைகள் முதல் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய ஆடைகளை வாங்கி பரிசாக வழங்கி இருக்கிறீர்கள். இவை எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி.
கோயம்புத்தூர் பிறந்த மண் என்பதால் இங்கு வந்தவுடன் நிறைய ‘பிளாஷ்பேக்’குகள் வந்து கொண்டே இருக்கிறது. அதில் ஒன்றை மட்டும் சொல்கிறேன். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை ஒவ்வொரு வருடத்திலும் கோடை விடுமுறைக்கு கோயம்புத்தூர் வந்து விடுவேன். கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து காரில் பயணிக்கும் போது சூலூர் -காசி கவுண்டர் புதூர்- புளியம்பட்டி- கவுண்டம்பாளையம் – இளையராஜாவின் பாடல்கள் – ஆடு மாடு மேய்ப்பது- மாட்டு வண்டி ஒட்டுவது – வயலில் நடப்பது- வரப்பில் உறங்குவது- கிணற்றில் குதிப்பது.. என எல்லா செயல்களையும் செய்திருக்கிறேன்.
கடந்த வருஷம் தியாவையும், தேவ்வையும் அழைத்துக் கொண்டு வந்து… இந்த புளிய மரத்தில் தான் விளையாடினேன்…. இந்த கிணற்றில் தான் குதித்தேன்…. இந்த வாய்க்காலில் தான் படுத்துக் கொண்டிருந்தேன்… என ஒவ்வொரு விசயத்தை அவர்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டேன். அதன் பிறகு குலதெய்வ கோயிலுக்கும் சென்று வந்தோம். இது எல்லாம் நான் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால்… நாம் டிஜிட்டல் ஸ்கிரீனுடன் செலவழிக்கும் நேரம் அதிகமாகி விட்டது. நான் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஆனால் குடும்ப உறுப்பினர்களுடன் செலவிடும் நேரம் குறைவாகிவிட்டது. அதனால் தயவு செய்து குடும்பத்தினருக்கான நேரத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக செலவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன் இதில் நானும் அடங்கி இருக்கிறேன். நானும் ஸ்கிரீன் நேரத்தை குறைத்துக் கொண்டு, குடும்பத்துடன் செலவிட வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.
நினைவுகளை உருவாக்குங்கள். சேமித்திடுங்கள். அது ஊரில் இருக்கும்போதுதான் கிடைக்கும். இதனை ஒருபோதும் யாரும் தவற விட்டு விடாதீர்கள். ஃபோனை பார்ப்பதன் மூலம் கிடைக்கும் நினைவுகளை விட, உங்களை சுற்றி உள்ள மக்களைப் பற்றி… ஊரைப் பற்றி… உறவுகளைப் பற்றி… நிறைய விசயங்களை பேசி, கலந்து உரையாடி, நினைவுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். இதைப் பற்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.
‘கருப்பு’ படத்திற்கு பிறகு இப்போது தான் உங்களை நான்
அனைத்தும் கிடைக்க ஆண்டவனிடம் நானும் பிரார்த்திக்கிறேன். இந்த நிகழ்ச்சியை திருவிழா போல் மாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்றார்.
