இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில், நிவின் பாலி, மமிதா பைஜு நடித்து வெளிய வந்திருக்கும் படம் “பெத் லஹம் குடும்ப யூனிட்”

ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் ஜஸ்டின் (நிவின் பாலி), அந்தப் பகுதியில் கேட்டரிங் தொழில் செய்து வருபவர். பொறுப்புடன் அம்மா தம்பி என குடும்பத்தை கவனித்து வர, திருமண வயதைத் தாண்டியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க, அதற்கு காரணம் என்ன என்று பிளாஷ் பாக்கில் தெறிய வருகிறது. இந்நிலையில், குடிப் பழக்கம் உள்ள ஒரு பொறுப்பற்ற தந்தையின் மகளான ஆஷ்லி (மமிதா பைஜூ) தன் குடும்பத்துடன் அந்த ஊருக்குக் குடிவருகிறார். தனது குடும்பச் சூழலால் மனவேதனையில் இருக்கும் ஆஷ்லிக்கு, ஜஸ்டினின் அன்பான மற்றும் பொறுப்பான குணத்தைப் பார்த்ததும் அவர் மீது காதல் மலர்கிறது. ஆரம்பத்தில் இந்த வயது வித்தியாசக் காதலை ஜஸ்டின் ஏற்க மறுத்தாலும், ஆஷ்லியின் சுட்டித்தனமும் அன்பும் அவரை மாற்றுகிறது. இவர்களின் காதலைச் சுற்றியுள்ள உலகம் எப்படிப் பார்க்கிறது, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடனும் எதார்த்தத்துடனும் விவரிக்கிறது மீதிக்கதை.

காதல் தோல்வி, கொஞ்சம் மச்சுரிட்டி, கொஞ்சம் வெட்கம். என, நடுத்தர வயதுக்கேற்ற உடல்மொழி எனப் பல உணர்ச்சிகளைத் தனது தேர்ந்த நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கிறார் நிவின் பாலி.

ஆஷ்லி பாத்திரத்தில் வரும் மமிதா பைஜூ, படம் முழுக்கத் தனது வழக்கமான சுட்டித்தனத்தாலும் துருதுருப்பான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்கிறார். சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, ஷியாம் மோகன், வினய் ஃபோர்ட் என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் செவ்வனே செய்துள்ளனர்.

விஷ்ணு விஜய்யின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபுவின் கேமரா கோணங்களால் படத்தின் அத்தனை ஃபிரேம்களும் அழகாகியிருக்கிறது.

பெத்லகேம் குடும்ப யூனிட் அழகான காதல் கவிதை.