இயக்குனர் பிரபு ராம். சி இயக்கத்தில் ஹரிஷ்
தனலட்சுமி, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, பிரியதர்ஷினி ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “நல்ல படம்”

எப்போதும் போதையில் மிதந்து வரும் இளம் நாயகனான ஹரீஷ் மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தாய் தங்கை, காதலி என யார் சொன்னாலும் மதுவை விடாத ஹரிஷ் மற்றும் அவரின் நண்பர்கள் சதா போதையில் இருக்க, இனி மது விற்பனைக்கு அரசாங்கமே தடை மிதித்தால் இவர்களின் நிலை என்ன என்பதே நல்ல படத்தின் கதை.

மதுவுக்கு அடிமையான ஒருவனின் வாழ்க்கையையும், அதே அவன் திருந்தி மதுவிலக்குக்கு எதிராக அவன் நடத்தும் போராட்டத்தையும் மையமாக வைத்து சுவரஸ்யமாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் பிரபுராம்.

நெடு நெடு வென்று வளர்ந்தந்திருக்கும் அறிமுக நாயகன் ஹரிஷ் நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும்தன் நடிப்பை நேர்த்தியாக செய்திருக்கிறார்.ஹரிஷை காதலிக்கும் பெண்ணாக தனலட்சுமி, காதலுக்காக போராடும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். கதாநாயகனின் அம்மாவாக ரமாவும், நண்பர்களாக கல்கி ராஜா மற்றும் மொட்டை ராஜேந்திரனும் தங்களுக்கான கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்

ஜெ.ஹாரிசின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் சேர்க்க சஜிஷ் னாசேவியரின் இசை என இரண்டும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது..

“நல்ல படம்” நல்ல பாடமாக மதிப்பிரியர்களுக்கு இருக்குமேயானால் இப்படம் நல்ல படமே.