
இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில்
விஜய் சேதுபதி, லிஜா மோள் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் “பத்தா”
1986 ல் சென்னையில் கதை தொடங்குகிறது. ஊரில் பெரிய ரௌடியான பத்தா (விஜய் சேதுபதி)
ஜோதி என்பவரை நடு ரோட்டில் ஊர் மக்களின் முன்னிலையில் அடிக்க ஜனங்கள் வேடிக்கை பார்க்கின்றனர்..பத்தா பேர் சொன்னாலே சிரிசு முதல் பெரிசு வரை பயம் கொள்ள, வீட்டிற்குள்ளேயே சிங்கம் வளர்த்து வரும் மிகப்பெரிய டான்! என சிறுவர்கள் டெவெலப் பண்ணி பேச அதையும் அவர்கள் நம்பும் அளவிற்கு தாதா வாக வலம் வருகிறார்..இந்த சூழலில் பத்தா எதிர்பாராத சம்பவம் ஒன்றில் சிக்கிக்கொண்டு தவிக்கும் நிலை உருவாகிறது. அதிலிருந்து வெளியே வர அவர் படும் பாடே “பத்தா”..
பத்தா கழிவறையில் மாட்டிக்கொண்டு முதலில் மிரட்டுவது, அதன்பின் சூழ்நிலை மாறி, தன்னை அடைத்து வைத்திருபது யார் என்று தெரியாமல் அவரிடம் கெஞ்சுவது, ஒரு கட்டத்தில் இனி தனது குடும்பத்தை சந்திக்கவே முடியாது என எண்ணி மனைவியையும், மகளையும் நினைத்து அழுவது என விஜய் சேதுபதி தனது நடிப்பில் மிரட்டிவிட்டார்.
விஜய் சேதுபதி க்கும் நிகராக, அனைவரின் கவனத்தையும் தன் நடிப்பால் ஈர்த்துள்ளார் குழந்தை நட்சத்திரம் நடிகர் சாய். சபரி என்கிற கதாபாத்திரத்தில் முதல் முறையாக பத்தாவை பயத்துடன் பார்த்து முழிப்பது, பின், கழிவறையில் உள்ள பத்தாவிற்கு உணவாக பொறை கொடுப்பது, அதன்பின் பத்தாவுடன் பயந்து பயந்து பழகுவது, பின் தனது மனதில் உள்ள உண்மையை பத்தாவிடம் விசும்பலும், அழுகையுமாக கூறுவது என அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.
லிஜோமோல் ஜோஸ். அணைத்து மனைவி மார்களுக்கும் இருக்கும் அக்கறை பயம், அன்பு நிறைந்த, காதல் ஆத்திரம் கலந்த அழுகை என கிடைக்கும் அத்தனை இடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்…
சாய் அபயங்கரின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது..
மொத்தத்தில் பத்தா ரசிக்கும் படியான குடும்பங்கள் பார்க்க வேண்டிய படம்…
