
ராஜமௌலி மகன் கார்த்திகேயா தயாரிப்பில் சஷாங் எலேட்டி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “Dont Trouble The Trouble”
பகத் பாசில், சாரா பலேகர்,சவுரப் சச்தேவ், மகேஷ் மஞ்சுரேக்கர் ஆகியோர் நடித்துள்ளனர்..
பகத் பாசில் (சூரி) ஆம்புலேன்ஸ் ட்ரைவர் ஆக பணியாற்றி கொண்டிருக்கிறார்.. சில சமயம் பணத்திற்காக சவலாக பெட்டிங் கட்டி ஆம்புலேன்ஸ் ஐ சரியான நேரத்தில் ஓட்டி நண்பரிடம் பணத்தை பெற்று விடும் பேர்வழி..
இந்த நிலையில் கொள்ளையடிப்பது, வட்டிக்கு விடுவது போன்று, பல தொழில் பார்க்கும் மகேஷ் மஞ்சரேக்கருடன் இவருக்கு மோதல் ஏற்பட ரூ. 25 லட்சம் தர வேண்டிய சூழ்நிலை உருவாகுகிறது. இந்த சூழலில் ஒரு மேஜிக் பொருள் பகத் பாசிலுக்கு கிடைக்க, அதிலிருந்து ஒரு சிறுமி வர, அந்த சிறுமி (ஆத்மா ) இவர் கண்ணுக்கு மட்டும் தெரிய, அது ஏன் இவரை தேடி வந்தது, அது சொல்ல வந்தது என்ன? என்பதே மீதிக்கதை.
பகத் பாசில் தன் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார், .
பேபி சாரா பார்க்க கொள்ளை அழகு.. சிறப்பான நடிப்பும் கூட..,
கால பைரவா இசையில், பிராட் பிரான்ஸிஸ் ஒளிப்பதிவில் அழகான படம்..
