
எஸ்எஸ்பி பிலிம்ஸ் சார்பில் எஸ் ஸ்ரீனிவாசன் குரு தயாரிக்க, இயக்குனர் முத்து எம் இயக்கத்தில் உருவாகி, சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமன், ஜாக் ராபின்சன், அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா, ராஜகோபால் என பலர் நடித்து வெளிவந்திருக்கும் படம் சிக்லெட்ஸ்..
இசை – பாலமுரளி
அடல்ட் காமெடி ஜானர் இல் தொடங்கும் இப்படத்தில், மூன்று பெண்கள் சிறு வயது முதலே நட்புடன் பழக, அவர்களது பெற்றோரும் நண்பர்களாக பழகி வருகிறார்கள்… பருவ வயதில் இருக்கும்
நயன் கரிஷ்மா), அனுஷா (அம்ரிதா ஹால்டர்) மற்றும் அம்பி (மஞ்சீரா) ஆகியோர் பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் நுழைய, சுதந்திரம் கிடைத்தது, என்று தனக்கென்று ஒரு வாழ்க்கையை தேடி, மனம் தடுமாறி தவறான பாதையை நோக்கி செல்ல துணிகிறார் கள்…ஒரு கட்டத்தில் பெண்கள் மூவரும், தங்கள் பெற்றோர்களிடம், , , தோழி யின் அக்காவின் திருமணத்திற்கு செல்வதாக போய் சொல்லி ஆளுக்கொரு ஆண்பிள்ளையுடன் டிரிப் செல்லுகிறார்கள்….அப்படி செல்லுகையில் அவர்களுக்கு நேரிடும் பிரச்சினை என்ன ?? அதனை எவ்வாறு கையாளுகிறார்கள் ?.அவர்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு அவர்கள் என்ன கைமாறு செய்கிறார்கள் என்பதே… சிக்லெட்ஸ்

ரியாவாக நடித்திருக்கும் நயன் கரிஷ்மா இப்படத்தில் தனது நடிப்பால் கவர்ந்துள்ளார். ரியாவின் அம்மாவாக நடித்துள்ள சுரேகா வாணியும், ஒரு பெண்ணின் தந்தையாக நடித்துள்ள ஸ்ரீமன், மற்றும் மறைந்த நடிகர் மனோ பாலாவும் படத்தின் சிறப்பம்சங்கள்.
இளம் கதாநாயகனாக வரும் சாத்விக் வர்மா, தேர்ந்தெடுத்து நடித்தால், தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கு…
செக்ஸ் காமெடியாக படம் தொடங்கினாலும், பின் பாதியில் , பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்கள் படும் பாட்டை, புரியும்படியாக தெளிவாக சொல்லியிருக்கும் இயக்குனரை பாராட்டலாம்…அதோடு மட்டுமில்லாமல்
LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்களை இழிவாகப் பார்ப்பதை கடந்து, சமூகத்தின் மாறிவரும் முன்னோக்கு போக்காக படத்தில் காட்டியிருப்பது புது முயற்சி…
கொளஞ்சி குமார் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் ல் முத்து.எம் இயக்கியிருக்கும் சிக்லெட்ஸ் … 2K கிட்ஸ் க்கான படம் (பாடம்).