
கார்த்திக் யோகி இயக்கி சந்தானம் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி….
காமெடி ஜானராக உருவாகி இருக்கும் இப்படத்தில்
சந்தானத்துடன் , மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க,
முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே எடுத்திருக்கும் இப்படத்தில்
வழக்கம் போல எல்லா படங்களிலும் இடம் பெறும் சந்தானத்தின் டீம் ஆன லொள்ளு சபா மாறன், தமிழ், மொட்டை ராஜேந்திரன் மற்றும் ஜான் விஜய் ரவி மரியா ஆகியோர் இணைந்து கலக்கியிருகின்றனர்

வடக்குபட்டி கிராமத்தில் வாழும் சிறுவனான சந்தானம் பானை செய்யும் தொழில் செய்து தன் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார்… கடவுள் நம்பிக்கை இல்லாத ராமசாமி(சந்தானம்), வளர்ந்த்ததும் தனக்கு சொந்தமான நிலத்தில் கோவில் கட்டி, மக்களின் கடவுள் நம்பிக்கையை வைத்து பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் அந்த ஊருக்கு வரும் தாசில்தாரோ கோவில் நிலத்தை குத்தகைக்கு விட்டு சம்பாதிக்கலாம் என ராமசாமிக்கு ஐடியா கொடுத்து, பெரும் தொகை ஒன்றை தனக்கு கமிஷனாக கேட்கிறார். இதில் உடன் பாடு இல்லாத ராமசாமி யோ , கமிஷன் தொகையின் சதவீதத்தை குறைக்க, கடுப்பான தாசில்தாரோ, ஊர் கோவிலுக்கு சீல் வைத்துவிடுகிறார். அக் கோவிலை திறக்க ராமசாமி என்னவெல்லாம் செய்கிறார் என்பதே மீதிக்கதை..
சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிசிருக்காங்க… அவருக்கு பெரிய அளவில் நடிப்பில் ஸ்கோர் செய்ய காட்சிகள் இல்லாத போதும், குடுத்த கதாபாத்திரத்தில், அளவாக நடிசிருக்காங்க…
மொட்டை ராஜேந்திரன் மற்றும் நிழல்கள் ரவி, கூல் சுரேஷ் ஆகியோர் தங்கள் நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். நிழல்கள் ரவி வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் சிரிப்போ சிரிப்பு…. படத்திற்கு பலமாக மாறன் மற்றும் சேஷு…பண்ணும் அலப்பறைகள்… .
என் படத்திற்க்கு வாங்க சிரிச்சிட்டு போங்க. என்று பக்கவாக திரைக்கதை அமைத்து அதில் ஜெயிச்சும் இருக்காரு..இயக்குனர் கார்த்திக் யோகி…
மொத்தத்தில் வ.ப.ராமசாமி இறை நம்பிக்கை இல்லாத நபர் இறையாண்மை ஆவதே கதை…4.5/5
