
டில்லி பாபு தயாரிப்பில், பி.வி ஷங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார், இவானா, பாரதிராஜா, தீனா, ஞானசம்பந்தம், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கள்வன்.
இசை -ஜி. வி. பிரகாஷ்
மலை கிராமத்தை சேர்ந்த ஜி.வி. பிரகாஷ் குமாரும், தீனாவும் திருட்டு வேலை செய்து தங்களது
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் ஊருக்குள் யானை புகுந்து அக் கிராமத்தில் ஆபத்தை உண்டு பண்ண, அதில் ஒருவர் இறந்து விடுகிறார்…இது ஒரு புறம் இருக்க, ஒரு வீட்டில் ஜி.வியும் தீனா வும் திருட செல்ல, அந்த வீட்டில் இருக்கும் இவானா மீது ஜீவிக்கு காதல் ஏற்படுகிறது. ஆனால், ஜிவி யுடைய காதலை இவானா ஏற்க மறுக்கிறார். இருந்தாலும் விடாமல் ஜீவி இவானா வை துரத்தி கொண்டிருக்க, அவருக்காக ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை யும் தத்தெடுத்து கொள்கிறார். இதையெல்லாம் ஜிவி பிரகாஷின் நண்பர் தீனா நினைத்து சந்தோஷப்பட டுகி. அதன் பின்னணியில் ஜிவி பிரகாஷ் க்கு ஒரு சுய நலம் இருப்பது தெரிய வருகிறது. அது என்ன ? ஜி. வி யின் எண்ணம் நிறைவேறியதா? பாரதிராஜா வின் கதி என்ன ? என்பதே மீதக்கதை..
இப்படத்தின் முழு பலமே பாரதிராஜா தான்..
காதல், காமெடி, துரோகம் , சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கமர்சியல் படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். குழந்தைகள் ரசிக்கும் வண்ணம், யானை யினையும் காடுகளையும் காண்பித்து புத்துணர்ச்சி தருகிறார்….

வழக்கத்திற்கு மாறாக ஜி.வி அற்புதமாக நடிக்க, அவரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இவானா அழுத்தமான கேரக்டர் ல நடிசிருக்காங்க… தீனா வின் காமெடி வொர்க் அவுட் ஆகியிருக்கு..
காடு, யானை, பிண்ணனி இசை மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் அருமை யாக இருப்பதால் இப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்…
