பரிதாபங்கள் புகழ் டிராவிட் செல்வம், சித்தி இத்னானி,  அஞ்சலி நாயர், சினிமாவலா சதிஷ் மற்றும் ஆர்.ஜே.தீபக் நடிப்பில்வெளி வந்திருக்கும் படம் “ட்ரோன்ஸ்”

டிராவிட் செல்வம், ஆர் ஜே.தீபக்,அஞ்சலி நாயர் மூவரும்
கல்லூரியில் இருந்து தற்கால இடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். இது பெற்றோர்களுக்கு தெரியாமல் இருக்க என்ன செய்வது என்று யோசிக்கையில் “பிளாக் ஹோல்” என்று சொல்லக்கூடிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் ஒன்று உள்ளது என்று நண்பர் ஒருவர் கூற அங்கு சென்று தங்குகிறார்கள்.

சிக்கல் என்னவென்றால் ஒரு முறை அதற்குள் செல்லும் இவர்களால் அந்த கால கெடு முடிந்த பிறகு தான் வெளியேறி செல்ல முடியும் என்று அங்கிருந்த விஞ்ஞானி சொல்ல ஒற்று கொண்டு தங்குகிறார்கள்..

இடையில் வெளியேற முடியாத சூழல் உருவாக, அதிலிருந்து எவ்வாறு வெளியே செல்வது என்று யோசிக்கையில் டிரோன் ஒன்று அடிக்கடி வெளியில் சென்று வருவதை பார்த்த அவர்கள் அது செல்லும் வழியை தொடர்ந்து  வெளி உலகத்துக்கு செல்ல திட்டமிடுகிறார்கள்.. திராவிட் தற்செயலாக ட்ரோனின் ரிமோட் ஐ அழுத்த, அது சில தெருக்களை  கடந்து செல்கிறது. அங்கு ஒரு வீட்டில் அழகிய இளம் பெண்ணான சித்தி இத்னானி அங்கு இருப்பதை காண்பிக்க, அவர் மீது டிராவிட் செல்வத்திற்கு காதல் மலர்கிறது. இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சித்தி இத்னானியின் சூனியக்காரி பாட்டியான தேவதர்ஷினி, இவர்களை சிறை பிடிக்கிறார்.

மறுபக்கம், காவல்துறை அதிகாரியான சினிமாவாலா சதிஷு திருமண வயதை தாண்டியும்  தகுந்த பெண் கிடைக்காததால் ஜோசியர் ஒருவரிடம் கை காட்ட, அதிர்ச்சியான தகவல் ஒன்றை சொல்கிறார்.. அது ஒரு புறம் இருக்க, காணாமல் போன மூவரையும் தேடும் பொருட்டு  சதீஷும் அஞ்சலி நாயரும் சித்தி இத்னானி வீட்டிற்கு வர பிறகு என்ன நடக்கிறது என்பது தான் “ட்ரோன்ஸ்”


பாட்டி கதையையும், சூன்யகாரி, பறக்கும் தட்டு என்ற பல கற்பனை கதைகளை சிறு வயதில் கேட்டு வியந்தவர்களுக்கு இதோ அம் மாதிரியான கதை என  இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத் கொடுத்துள்ளார்..

நாயகனாக நடித்திருக்கும் டிராவிட் செல்வம், காமெடி கதாபாத்திரம் என்பதால் அதற்கான அனைத்து அம்சங்களையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தி, கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்

கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, கண்ணகுழி  தேவதை…, நடிப்பில் அரக்கி…


மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயர், நிற பாகுபாடு  பார்க்கும் பல ஆண்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார்..

சூனியக்காரியாக நடித்திருக்கும் தேவதர்ஷினிக்கு இது ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். அதை மிக லாவகமாக கையாண்டு நடிக்க அவரது திரை அனுபவம் கை கொடுத்துள்ளது..

காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் சினிமாவாலா சதீஷ், அளவான நடிப்பினை கொடுத்துள்ளார். குரேஷி வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. ஆர்.ஜே.தீபக் மற்றும் சசி செல்வராஜ் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஜெயந்த் சேது மாதவன், ஒளிப்பதிவில்

இசையமைப்பாளர் ஹரி.எஸ்.ஆர்-ன் இசையில் “ட்ரோன்ஸ்” ஒரு சுற்று வலம் வர வாய்ப்புள்ளது